Shuru
Apke Nagar Ki App…
சேலம் மாநகர அதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் அனுசரிப்பு! சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Rajendran
சேலம் மாநகர அதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் அனுசரிப்பு! சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி! பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு வழிபாடு... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் விநாயகர் சன்னதியில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.இதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பந்தக்கால் நட்டு தீபத் திருவிழாவிற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.1
- ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.1
- நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா1
- மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.1
- தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக சௌமியா அன்புமணி பேட்டி தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.1
- வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் பாமகவில் இணைந்தனர்.1
- சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்! சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.1