Shuru
Apke Nagar Ki App…
வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் பாமகவில் இணைந்தனர்.
Periyasamy
வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் பாமகவில் இணைந்தனர்.
More news from Tamil Nadu and nearby areas
- வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் பாமகவில் இணைந்தனர்.1
- கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி..! தருமபுரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. போட்டிகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பாராட்டுக்குரியது என்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும், தவறான பழக்கவழக்கங்களில் இருந்து விலகி உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் கூறினார். மேலும், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆவின் பால் கொள்முதல் சற்று சரிந்துள்ளதாகவும், பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்குவதால் கால்நடை வளர்ப்போர் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர். மேலும், மாட்டுத்தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சட்டப்பேரவையில் மழைநீர் வெளியேறுவதற்கான வசதி மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பேசியதாகவும், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், விளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய மைதானமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு அரசு சமீபத்தில் சுமார் ரூ.6,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் சுமார் ரூ.14,000 கோடி விவசாயக் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேருந்து நிலைய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேவைப்பட்டால் பேருந்து நிலைய பிரச்சனைக்காக பாமக உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்றும் கூறினார். தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து கழிவுநீர் காவிரியில் கலக்கப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல தண்ணீரில் கழிவுநீர் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தருமபுரி மாவட்டத்தில் தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தொடர்ந்து இயக்குவதற்காக அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் கரும்புகளை அரவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கரும்பு சாகுபடி குறைந்து வரும் நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி மற்றும் பாமக நிர்வாகிகள் பெரியசாமி, மாது, நம்பிராஜன், வாசு நாயுடு உள்ளிட்டோர், மகளிர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி வ.உ.சி.துறை முகத்தில்புதிய சாதனை!335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டகக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.! தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.1
- பாலக்கோடு அருகே ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! பாலக்கோடு அருகே ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கீழ்கொள்ளூப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம் முழங்க மங்கள இசையுடன் பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பூக்களால் அலங்கரித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதையடுத்து அருள்மிகு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சிவசக்தி, ஸ்ரீஊர்மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். . இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.2
- கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது1
- ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஜிப்சி இல்லத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் வழங்கினார். கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் அமைந்துள்ள ஜிப்சி ஏழை எளிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் 81வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது,1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு, உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 3-வது நாளான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துவரப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதலைப் பண்ணை காவிரி ஆற்று பகுதியில் மட்டுமே கிரேன் உதவி யுடன் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது . மாலை வரை சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது . மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்1