ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு, உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 3-வது நாளான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துவரப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதலைப் பண்ணை காவிரி ஆற்று பகுதியில் மட்டுமே கிரேன் உதவி யுடன் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது . மாலை வரை சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது . மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு, உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 3-வது நாளான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துவரப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதலைப் பண்ணை காவிரி ஆற்று பகுதியில் மட்டுமே கிரேன் உதவி யுடன் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது . மாலை வரை சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது . மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.1
- தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக சௌமியா அன்புமணி பேட்டி தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.1
- வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் பாமகவில் இணைந்தனர்.1
- புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமை வகித்தார் ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் அதிகப்படியாக குடிநீர் பிரச்சனை சாலை சாக்கடை கால்வாய் தூர் வராப்படாமல் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க கோரி பேசினேன். சாக்கடை கால்வாய் களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதே போல சனத்குமார் நதியில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து கலக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். அதற்கும் ஆவன செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் சாலை பணி இரண்டு வருடத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி என்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து ரயில்வே வசம் ஒப்படைக்கப்படும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் நிறைவடையும் என்றார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்து தண்ணீர் வழங்க வேண்டும் ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல பல துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மின் தட்டுப்பாடு நிலவுகிறது காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை தடையின்றி மின்சாரம் வழங்க எம்பி மணி பேசி உள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை அவசிய தேவை. சட்டசபை நிர்வாக அலுவலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் பணிகள் விரைந்து செயல்படுத்த வசதியாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது1
- சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி! பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் விடுதியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து பெற்றோர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டி நடைபெற்ற நிலையில், விடுதியில் தங்கி பயிற்சி பெறும் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதி மேலாளர் கோகிலா, இரு மாணவிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசியபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், இரு தரப்பு பெற்றோர்களையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, தங்களது மகளை மற்றொரு தரப்பினர் தாக்கியதாக ஒரு மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், விடுதி மேலாளர் இதனை மறுத்து, மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினை மட்டுமே என்றும், மற்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர். இதனால் காந்தி விளையாட்டு மைதானத்தில் பரபரப்பு நிலவியது.1