Shuru
Apke Nagar Ki App…
ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்கள் பங்கேற்பு திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத சனிக்கிழமையன்று, ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர், வெற்றிலை மற்றும் துளசி மாலையாக அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரின் திருவருளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.
அனல் ஆனந்த்
ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்கள் பங்கேற்பு திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத சனிக்கிழமையன்று, ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர், வெற்றிலை மற்றும் துளசி மாலையாக அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரின் திருவருளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.1
- புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில், AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில், AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி, முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.1
- புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- உப்பள தொழிலை காக்க போராட்டம் நடத்தினால் தூத்துக்குடி தாங்காது சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை1
- மீனவள் வலையில் சிக்கிய அரேகிய வகை நட்சத்திர ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள் தொண்டி மகா சக்தி புரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கு சொந்தமான படகில் முனிஸ் இரண்டு மீனவர்கள் தொண்டி மகாசக்திபுரம் கடலுக்குச் சென்று வலையை எடுத்த போது வலையில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் தங்களது வலையில் அடுத்தடுத்து இரண்டு ஆமைகள் சிக்கி இருந்தது அதனை கண்ட மீனவர்கள் உடனடியாக வலையை அறுத்து பத்திரமாக மீண்டும் கடலுக்குள் இரண்டு ஆமைகளையும் விட்டனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அது தடை செய்யப்பட்ட ஆமை என்பதால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படை அறிவுத்தலின்படி மீனவர்கள் பத்திரமாக நீண்ட நேரம் போராடி வலையை அறுத்து மீட்டு கடலில் விட்டனர். வலையில் சிக்கிய ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரம் வலை சேதமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது இதனை அடுத்து நேற்று பெய்த மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தல் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை புதுகை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 46 மி.மீ,குடுமியான்மலை 30 மி.மீ, திருமயம் 25.2 மி.மீ அன்னவாசல் 16 மி.மீ , காரையூர் 10.4 மி.மீ, கந்தர்வகோட்டை 7.5 மி.மீ, கீரனூர் 6.4 மி.மீ,அரிமளம் 6 மி.மீ, உடையாளிபட்டி 5.8மி.மீ, பொன்னமராவதி 4.2 மி.மீ, ஆலங்குடி 3 மி.மீ,கரம்பக்குடி 1.2மி.மீ என மொத்தம் 161.7மி.மீ பதிவாகியுள்ளது.1
- தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் கட்டிட தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும்-புதியம்புத்தூரில் ஏ.ஐ.டி.யு சி கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர்சங்க 9 வது மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாவட்ட மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் பேரணியாக பஜார் வழியாக வந்து புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு ஏ.ஐ.டி.யு.சி சங்க கொடி ஏற்றப்பட்டது. மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் துவக்க உரை ஆற்றினார். முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பகுதியில் பல தொழிற்சாலைகளை தொடங்கிட வேண்டும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் உதவித்தொகை 4 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்திட வேண்டும், பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் 8 லட்ச ரூபாய் உதவித்தொகையை 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிரசவ உதவித்தொகை மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்கிற கணக்கின்படி ஆறு மாத சம்பளம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும், திருமண உதவித் தொகையை ரூபாய் ஒரு லட்சம் உயர்த்த வேண்டும், 3 குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை என்பதை கைவிட்டு, தொழிலாளர்களின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி உதவித் தொகையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை வருடம் 5000 ரூபாயும், 10, 11, 12 படிப்பதற்கு ஆண் பெண் இரு குழந்தைகளுக்கும் வருடம் பத்தாயிரம் ரூபாய் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு முழு செலவுகளையும் நல வாரியமே ஏற்க அரசாணை வெளியிட வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், பணியிட விபத்து இல்லாத வேறு வகையான விபத்து மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், ஈமச்சடங்கு நிதி ரூபாய் 50,000 ஓய்வூதியம் ரூபாய் 6000 வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் பாதிக்கப்படும்போதும் சாதாரண காலங்களிலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் இ எஸ் ஐ மருத்துவ வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதுவரை விபத்துக்கான சிகிச்சையை வாரியம் ஏற்க வேண்டும், விபத்து காலத்தில் சம்பள இழப்பு ஏற்படாமல் சம்பள நிவாரணம் வழங்க வேண்டும் மேற்கண்ட தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்புகளையும் நிறைவேற்றுவதற்காக கட்டிடம் கட்டுபவரிடம் வசூலிக்கப்படும் நலநிதி ஒரு சதம் என்பதை திட்ட மதிப்பில் 5 சதம் என்று உயர்த்தி வசூலிக்க வேண்டும் கட்டுமான தொழிலுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச கூலி அரசாணைப்படி உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் அரசாணையை திருத்த வேண்டும் தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும். மாதத்தில் எல்லா நாட்களும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் தங்குமிட வசதிகள் தமிழ்நாட்டில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் மகாராஜன், துணைத் தலைவர் சண்முகராஜ், வைரவன் நிர்வாக குழு மேரி தங்கம், புஷ்பவல்லி, மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சேது ஆகியோர் புதிய நிர்வாகிகளாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் முருகன் மாநாட்டு பொருளாளர் பால்ராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் பாலமுருகன் பாபு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வன் சிபிஐ பச்சம்மாள் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.1