Shuru
Apke Nagar Ki App…
அம்பாசமுத்திரம் பாபநாசம் அருகே டாணா குடியிருப்புக்குள் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பாபநாசம் வனப் பகுதிக்குள் கரடி, மிளா, மான்,யானை,சிறுத்தை, காட்டுப்பன்றிகள் போன்ற பல்வேறு வன உயிரினங்கள் வசித்து வருகிறது . இந்நிலையில் அவைகள் அவ்வப்போது மலையடிவார கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கமாக கொண்டு உள்ளது . இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதிக்குள் இருந்து இருந்து இறங்கி வந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது இதனைப் பார்த்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Jil jolly Club
அம்பாசமுத்திரம் பாபநாசம் அருகே டாணா குடியிருப்புக்குள் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பாபநாசம் வனப் பகுதிக்குள் கரடி, மிளா, மான்,யானை,சிறுத்தை, காட்டுப்பன்றிகள் போன்ற பல்வேறு வன உயிரினங்கள் வசித்து வருகிறது . இந்நிலையில் அவைகள் அவ்வப்போது மலையடிவார கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கமாக கொண்டு உள்ளது . இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதிக்குள் இருந்து இருந்து இறங்கி வந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது இதனைப் பார்த்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது இந்நிலையில் இன்று விடுமுறை தினமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது இதனால் ஐந்தருவி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது1
- கயத்தாறு தாலுகா தலையால் நடந்தால் குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் தொடக்கம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சங்கர் நகர் கங்கைகொண்டான் பார்த்திங்களா ராஜா பெருங்குடி வழியாக தலையால் நடந்தால் கிராமத்திற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பஸ்களில் இந்த 9 எல் என்ற வழித்தடத்தில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், தலையால் நடந்தால் குளம் கிளைச் செயலாளர் பால்பண்ணைமுத்து, ஏ.சி.பால்முருகன்,கவிதா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பேச்சியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் வள்ளிவேல், முத்துமாலை, பலவேசமுத்து, இமானுவேல், முத்துக்குமார், ஊர் நாட்டாண்மைகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.4
- த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.1
- குற்றால அருவிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்த வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.3
- ஓட்டப்பிடாரம் அருகே நான்கு வழி சாலையில் தவறான திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு -புதியம்புத்தூர் போலீசார் விசாரணை ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுதாகர் (40)என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியபுரம் பாலத்தில் சுதாகர் தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த மாருதி ஆல்ட்டோ கார் அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயர்ந்தார். சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (40 )என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்1
- சேர்மன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக உள்ள ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமண விழாவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணமக்களை வாழ்த்தினார்.1
- கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் இன்று ஓணம் பண்டிகையை ஒட்டி ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது.இதனை ஒட்டி கோவிலில் அம்மன் சன்னதி முன்பு பல்வேறு வகை பூக்களினால் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்த நிலையில் அத்தப் பூ கோலமிட்டனர்.பின்னர் கோவிலில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சித்தர் பீட தலைவர் சின்னத்தம்பி செய்து இருந்தார்.1
- தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.1