சத்குரு முன்னிலையில் வரும் 21ம் தேதி ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்..! கோவை ஈஷா கிராமோத் சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பங்கேற்று பேசினார். ஈஷா கிராமோத்சவம் வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு, அடையாளங்களை கடந்து செல்லும் தன்மை மற்றும் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஆகிய பலன்களை விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் பெற முடியும். இதன் அடிப்படையில் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக விளையாட்டை கொண்டு வரும் நோக்கில், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா சத்குருவால் 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஈஷா கிராமோத்சவம்-2025;- 6 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் 17-ஆவது பதிப்பான “ஈஷா கிராமோத்சவம்-2025” தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது. ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள் ஈஷா கிராமோத்சவ போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். இதில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட மற்றும் மண்டல அளவிலான இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில் 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன. இதில் 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் பங்கேற்க உள்ளன. முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்கள் இதில் மத்திய விளையாட்டு த்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். பரிசுத்தொகை ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளின் முதல் 2 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. அதே போன்று இறுதிப் போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹ 5,00,000, ₹ 3,00,000, ₹ 1,00,000, ₹ 50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படு கின்றன. கிராமிய கலை நிகழ்ச்சிகள் இந்த திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளுடன்,நம் தமிழ்நாட்டின், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம் பெறவுள்ளன. வண்ண கோலப் போட்டி மேலும் பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, மணி நடை, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து 33,000 ரொக்கப் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளது கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புடவை பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

- இரவின் மடியில்.1
- NGM கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை தாவரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுவது மிகவும் பயனுள்ள முயற்சி; இது கல்வியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்கிறது.இயற்கை விவசாயத்தின் அடிப்படை கொள்கைகள் (ரசாயனம் இன்றி மண்ணின் வளம் பேணுதல், பசுந்தழை உரம், ஜீவாமிர்தம், முதலியன). வீட்டுத் தோட்டம் / கல்லூரி வளாகத்தில் காய்கறி, கீரை, மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகள். நீர் சேமிப்பு, மண் சரிவு கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நல்ல நடைமுறைகள். மூலிகை தாவரங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்கல்லூரி போடனி துறைகளில் மருத்துவ மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்து, மாணவர்களுக்கு தாவரத்தை நேரில் கண்டு கற்பிக்கும் நடைமுறை உள்ளது. மாணவர்கள் மூலிகை மருந்துகள், மூலிகை சார்ந்த தயாரிப்புகள் (காஸ்மெடிக், பவுடர், கஷாயம் போன்றவை) தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். NGM கல்லூரியில் ஏற்கனவே நடைபெறும் செயல்பாடுகள்போடனி துறையில் medicinal & herbal garden, MEDIPLAP போன்ற கிளப்புகள் மூலம் மூலிகை தாவர விழிப்புணர்வு, காட்சிகள், தினமும் “ஒரு மூலிகை” பற்றிய தகவல் பகிர்வு போன்றவை நடக்கின்றன.Green Society, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவது போன்ற செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது.மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?கல்லூரி medicinal garden மற்றும் related clubs (MEDIPLAP, Green Society) இல் இணைந்து செயல்படுதல்.தங்கள் வீட்டில் / ஹாஸ்டல் சுற்றுவட்டாரத்தில் சிறிய இயற்கை / மூலிகை தோட்டம் அமைத்து, கல்லூரி اஆசிரியர்களிடம் இருந்து விதை, தளவாட ஆலோசனைகளைப் பெறுதல். ஒரு சிறிய ஊக்கச் செய்திஇப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிடித்து செயல்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் இயற்கை விவசாய yritt entrepreneur, மூலிகை தயாரிப்பு நிபுணர், சுற்றுச்சூழல் ஆலோசகர் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன1
- ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.1
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்காக. அவர்நினைவாக.1