மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு “06780 / 06781 இராமேஸ்வரம் - பழனி - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை” மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு “06780 / 06781 இராமேஸ்வரம் - பழனி - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை” நாளை (புதன் கிழமை) மாலை 04.55 மணியளவில் இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நாளை மாலை 06.13 மணிக்குள் பரமக்குடி வந்து பிறகு 06.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 07.45 மணியளவில் மதுரை சந்திப்பு வந்து சேரும்., பிறகு அங்கிருந்து 07.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் பழனி சென்று சேரும்!. மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் (வியாழன் கிழமை) பிற்பகல் 02.20 மணியளவில் பழனி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 04.25 மணியளவில் மதுரை சந்திப்பு வந்து சேரும்., பிறகு 04.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 05.54 மணியளவில் பரமக்குடி வந்து சேரும், பிறகு 05.55 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 08.10 மணியளவில் இராமேஸ்வரம் சென்று சேரும்!. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் பயணிகள் மற்றும் ஒட்டன்சத்திரம், பழனி போன்ற பகுதிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்!.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு “06780 / 06781 இராமேஸ்வரம் - பழனி - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை” மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு “06780 / 06781 இராமேஸ்வரம் - பழனி - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை” நாளை (புதன் கிழமை) மாலை 04.55 மணியளவில் இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நாளை மாலை 06.13 மணிக்குள் பரமக்குடி வந்து பிறகு 06.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 07.45 மணியளவில் மதுரை சந்திப்பு வந்து சேரும்., பிறகு அங்கிருந்து 07.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் பழனி சென்று சேரும்!. மறுமார்க்கத்தில், நாளை மறுநாள் (வியாழன் கிழமை) பிற்பகல் 02.20 மணியளவில் பழனி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 04.25 மணியளவில் மதுரை சந்திப்பு வந்து சேரும்., பிறகு 04.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 05.54 மணியளவில் பரமக்குடி வந்து சேரும், பிறகு 05.55 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 08.10 மணியளவில் இராமேஸ்வரம் சென்று சேரும்!. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் பயணிகள் மற்றும் ஒட்டன்சத்திரம், பழனி போன்ற பகுதிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்!.
- கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்! திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர்.இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக (Post-mortem) ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்1
- கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்! கடலில் தவறி விழுந்து இரண்டு மீனவர்கள் பரிதாப பலி: திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினத்தில் சோகம்! ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த செல்லக்குழந்தை என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது தள்ளுவலை (தள்ளுபடி வலை) இழுத்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்ற சக மீனவர்கள், கடலில் மிதந்த அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதேபோல், திருவாடானை அருகே உள்ள பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த நாகூர்செல்வம் என்பவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நங்கூரத்தைக் கடலில் இறக்கியபோது தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில், அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடலைக் கைப்பற்றினர். இச்சம்பவங்கள் குறித்துத் தகவலறிந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக (Post-mortem) ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- காரைக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் நடைபெற்றது. பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் சிவன் கோயில் திடலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்றதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. வான வேடிக்கைகளுடன் வாத்தியங்கள் முழங்க தொடங்கிய ஊர்வலத்தில் விழாக்குழு விநாயகருடன், நகரில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாட்டுக்கல், வலையபட்டி, புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்துநிலையம் வழியாக வந்து அமரகண்டான் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.1
- சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது மேலும் சாத்தூர் நகர் பகுதி மற்றும் அமீர்பாளையம் வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தூத்துக்குடி பி என் டி காலனி சேர்ந்த வாழ்த்துக்கள்.இசக்கி ராஜ் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் அஞ்சு பவுன் நகை வேலவன் ஸ்டோர் நான் கடையில் வாங்கினேன் தாலி செயின் தான் அது மூன்று வருடமாக கழுத்தில் அணிந்திருந்தார்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளேன் அவர்கள் அதை ஆடிட்டிங் பார்த்தபோது தங்கம் இல்லாத உலோகம் இருப்பதாக கூறினார்கள் வீடியோ ஆதாரங்கள் அனுப்பி உள்ளார்கள் வேலவன் கடைக்கு நான் அந்த வீடியோவை அனுப்பினேன் இதனை எடுத்து வேலவன் நகைக்கடை பணியாளர்கள் நேரடியாக வந்து தனியார் நிதி நிறுவனத்தில் வந்து பார்வையிட்டார்கள். வேலவன் நகைக்கடைகாரர்களே நாலு லட்சத்து 22,000 தனியார் நிதி நிறுவனத்திலிருந்து நகையைத் திருப்பிப் படுகிறது அரசு வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் வேலவன் கடையில் வைத்து நகையை சோதனை செய்யும் போது சரியான முறையில் இருப்பதாக கூறுகிறார்கள் எங்களுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது அடுத்து தாலி செயின் நடுப்பகுதியை வெட்டப்பட்டு அதனை உருக்கி மீண்டும் சோதனை செய்யும் போது தங்கம் இல்லாத உலோகம் கலக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது நாங்கள் கேட்கும்போது இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உறவினர்கள் நண்பர்கள் வேலவன் நகை கடையில் நகை வாங்கி உள்ளார்கள் தாலி செயினில் தான் இந்த தங்கம் இல்லாத உலோகம் சேர்க்கப்பட்டதாக தெரிய வருகிறது குறுகிய காலத்தில் அதிக லாபம் செய்வதற்காகவே வேலவன் நகைக்கடை நிறுவனம் இப்படி செய்துள்ளனர் இதனால் பொதுமக்களுக்கு நகை கடை மீது அச்சம் ஏற்படுகிறது தங்கம் மீது இது போல மோசடி நடைபெறுவது வருத்தமளிக்கிறது. எங்களுக்கு மட்டும் நகையை திருப்பி தர வேண்டாம் இதுவரை உங்களிடம் தங்கம் வாங்கிய அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் தேசிய நுகர்வோர் ஆணையம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம் இதனை அடுத்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் சி எஸ் ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலவன் ஸ்டோர் நகை கடையில் யாரும் தங்கம் வாங்கி ஏமாற வேண்டாம் தங்கம் நகை விற்பதை தடை செய்ய வேண்டும் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் வேலவன் நகைக்கடை நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்க நகையை திருப்பி வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம்கூறினார். உடன் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில துணைத்தலைவர் வள்ளிக்கண்ணு தேவர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேலவன் னஹப்பர் மார்க்கெட் நிறுவனம் நகைக்கடை மீது கூறப்பட்ட புகார் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.2
- பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் புதிய விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி விழாவை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் டிரோன் மூலம் மலர்களும்,புனித நீரும் தெளித்து அருட் பிரசாதம் வழங்கப்பட்டது1
- சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு! ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாயல்குடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், சாயல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மணிகண்டன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தொடக்கத்திலிருந்தே கட்சிக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் இவர்களது களப்பணிகளுக்கு உள்ளூர் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் கட்சியில் இணைய விரும்பிய சில நபர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பதவிகள் வழங்குவதற்காகப் பேரம் பேசப்பட்டதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தவெக தொண்டர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்தவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சிக்காக உழைக்கும் உண்மையான தொண்டர்களின் உழைப்புக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தங்கள் மீதான அவதூறு பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாயல்குடி வணிகர் சங்கப் பிரமுகர் பெத்தராஜ் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. இதனிடையே, இந்தச் சூழலில் கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை ஆதாரமற்ற அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் தரப்பு எச்சரித்துள்ளது. 1