logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது மேலும் சாத்தூர் நகர் பகுதி மற்றும் அமீர்பாளையம் வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

1 hr ago
user_Virudhunagar
Virudhunagar
Virudhunagar, Tamil Nadu•
1 hr ago

சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது மேலும் சாத்தூர் நகர் பகுதி மற்றும் அமீர்பாளையம் வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாவட்ட ஆட்சியர் தீவிர கள ஆய்வு ​தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. ​இம்முகாமின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், அப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ​நாகையகவுண்டன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகள். ​புதுப்பட்டியில் அரசு சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி வசதிகள் மற்றும் தரம். ​காமயகவுண்டன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துணை மின்நிலைய (Substation) கட்டுமானப் பணிகள். ​உத்தமபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகச் செயல்பாடுகள். ​ராயப்பன்பட்டியில் காவல் நிலையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகச் செயல்பாடுகள். ​ஆனைமலையான்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகக் (VAO Office) கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையச் செயல்பாடுகள். ​இந்த ஆய்வுகளின்போது பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ​இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO), ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் அரசுத் துறைகளின் பல்வேறு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்  மாவட்ட ஆட்சியர் தீவிர கள ஆய்வு
​தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
​இம்முகாமின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், அப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
​நாகையகவுண்டன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகள்.
​புதுப்பட்டியில் அரசு சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி வசதிகள் மற்றும் தரம்.
​காமயகவுண்டன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துணை மின்நிலைய (Substation) கட்டுமானப் பணிகள்.
​உத்தமபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகச் செயல்பாடுகள்.
​ராயப்பன்பட்டியில் காவல் நிலையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகச் செயல்பாடுகள்.
​ஆனைமலையான்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகக் (VAO Office) கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையச் செயல்பாடுகள்.
​இந்த ஆய்வுகளின்போது பணிகளை ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
​இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO), ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் அரசுத் துறைகளின் பல்வேறு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தங்கம்மாள் புரத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடத்தோடு வருசநாடு சாலையில் மறியல் போராட்டம் *கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இரண்டுபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டுபுறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    1
    தங்கம்மாள் புரத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடத்தோடு வருசநாடு சாலையில் மறியல் போராட்டம்
*கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இரண்டுபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டுபுறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்
    1
    பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள்
⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக
தாழ்மையான வேண்டுகோள்.
நாகராஜு பெரியசாமி பிள்ளை
சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர்
நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director
செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்
    user_நாகராஜ் பெரியசாமி பிள்ளை
    நாகராஜ் பெரியசாமி பிள்ளை
    நத்தம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் புதிய விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி விழாவை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் டிரோன் மூலம் மலர்களும்,புனித நீரும் தெளித்து அருட் பிரசாதம் வழங்கப்பட்டது
    1
    பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை ஸ்ரீ மலைநாச்சி அம்மன் கோவிலில் புதிய விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி விழாவை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் டிரோன் மூலம் மலர்களும்,புனித நீரும் தெளித்து அருட் பிரசாதம் வழங்கப்பட்டது
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கன்னிவாடி அருகே கிணற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சோமலிங்க சுவாமி கோவில் செல்லும் வழியில் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உரை அமைக்கும் பணி மேற்கொள்ள கிணற்றுக்குள் இறங்கிய பெரியகுளம், கல்லுப்பட்டி சேர்ந்த ஈஸ்வரன்(32) என்பவர் கம்பி வடம் அறுந்து விழுந்ததில் கிணற்றுக்குள் சென்ட்ரிங் கம்பி உடலில் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புதுறையினர் கம்பியை அறுத்து மீட்பு வலையை பயன்படுத்தி ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    1
    கன்னிவாடி அருகே கிணற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சோமலிங்க சுவாமி கோவில் செல்லும் வழியில் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உரை அமைக்கும் பணி மேற்கொள்ள கிணற்றுக்குள் இறங்கிய பெரியகுளம், கல்லுப்பட்டி சேர்ந்த ஈஸ்வரன்(32) என்பவர் கம்பி வடம் அறுந்து விழுந்ததில் கிணற்றுக்குள் சென்ட்ரிங் கம்பி உடலில் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
ஆத்தூர் தீயணைப்புதுறையினர் கம்பியை அறுத்து மீட்பு வலையை பயன்படுத்தி ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • வெளி மாவட்டங்களில் இருந்து கூமாபட்டி பகுதிக்கு மேச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாத்துக்கள்.... தூத்துக்குடி , தென்காசி , ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுமார் லட்சக்கணக்கான வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வாத்துகளை மேய்ச்சலுக்கு ஒவ்வொரு பகுதியாக நெல் அறுவடை செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மேச்சலுக்கு விடுவார்கள்.இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து வாத்து மேய்ப்பவர்கள் வத்திராயிருப்பு பகுதிக்கு மேச்சலுக்காக வாத்துக்களை கொண்டு வந்துள்ளனர்.கூமாபட்டி , வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதியில் நெல் விவசாய பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் கொண்டுவரப்பட்டு மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ளது.
    1
    வெளி மாவட்டங்களில் இருந்து கூமாபட்டி பகுதிக்கு மேச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாத்துக்கள்....

தூத்துக்குடி , தென்காசி ,  ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுமார் லட்சக்கணக்கான வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது.  இந்த வாத்துகளை மேய்ச்சலுக்கு ஒவ்வொரு பகுதியாக நெல் அறுவடை செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மேச்சலுக்கு விடுவார்கள்.இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து  வாத்து மேய்ப்பவர்கள் வத்திராயிருப்பு பகுதிக்கு மேச்சலுக்காக  வாத்துக்களை கொண்டு வந்துள்ளனர்.கூமாபட்டி , வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதியில்  நெல் விவசாய பணிகள் தற்போது துவங்கியுள்ள  நிலையில்   ஆயிரக்கணக்கான வாத்துக்கள்  கொண்டுவரப்பட்டு  மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ளது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    4 hrs ago
  • கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொட்டித் தீர்த்த கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ​தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று எதிர்பாராத விதமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், லோயர் கேம்ப், உத்தமபாளையம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் திடீரென மேகமூட்டம் திரண்டு வந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முக்கிய விவசாய மண்டலமாகத் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள திராட்சைத் தோட்டங்கள், தென்னை, வாழை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இந்த மழை மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்துள்ள இந்த மழை, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்பதால் விவசாயிகள் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தொடர் வெயிலால் அவதிப்பட்டு வந்த கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு இந்தத் திடீர் மழை வெப்பத்தைத் தணித்து, இதமான குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு  கொட்டித் தீர்த்த கனமழை  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
​தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று எதிர்பாராத விதமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், 
லோயர் கேம்ப், உத்தமபாளையம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் திடீரென மேகமூட்டம் திரண்டு வந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முக்கிய விவசாய மண்டலமாகத் திகழ்ந்து வருகிறது. 
இங்குள்ள திராட்சைத் தோட்டங்கள், தென்னை, வாழை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இந்த மழை மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. 
நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்துள்ள இந்த மழை, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்பதால் விவசாயிகள் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
தொடர் வெயிலால் அவதிப்பட்டு வந்த கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு இந்தத் திடீர் மழை வெப்பத்தைத் தணித்து, இதமான குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி!!
    1
    தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி!!
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல் கண்ணில் பலத்த காயம்; மருத்துவமனையில் சிகிச்சை
    1
    தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல்
கண்ணில் பலத்த காயம்; மருத்துவமனையில் சிகிச்சை
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.