Shuru
Apke Nagar Ki App…
வெளி மாவட்டங்களில் இருந்து கூமாபட்டி பகுதிக்கு மேச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாத்துக்கள்.... தூத்துக்குடி , தென்காசி , ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுமார் லட்சக்கணக்கான வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வாத்துகளை மேய்ச்சலுக்கு ஒவ்வொரு பகுதியாக நெல் அறுவடை செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மேச்சலுக்கு விடுவார்கள்.இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து வாத்து மேய்ப்பவர்கள் வத்திராயிருப்பு பகுதிக்கு மேச்சலுக்காக வாத்துக்களை கொண்டு வந்துள்ளனர்.கூமாபட்டி , வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதியில் நெல் விவசாய பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் கொண்டுவரப்பட்டு மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ளது.
Virudhunagar
வெளி மாவட்டங்களில் இருந்து கூமாபட்டி பகுதிக்கு மேச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாத்துக்கள்.... தூத்துக்குடி , தென்காசி , ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுமார் லட்சக்கணக்கான வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வாத்துகளை மேய்ச்சலுக்கு ஒவ்வொரு பகுதியாக நெல் அறுவடை செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மேச்சலுக்கு விடுவார்கள்.இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து வாத்து மேய்ப்பவர்கள் வத்திராயிருப்பு பகுதிக்கு மேச்சலுக்காக வாத்துக்களை கொண்டு வந்துள்ளனர்.கூமாபட்டி , வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதியில் நெல் விவசாய பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் கொண்டுவரப்பட்டு மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ளது.
More news from Tamil Nadu and nearby areas
- சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது மேலும் சாத்தூர் நகர் பகுதி மற்றும் அமீர்பாளையம் வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டத்தில் எம்.பி, அமைச்சர் பங்கேற்பு. மதுரை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு (Airport Advisory Committee) கூட்டம் நடைபெற்றது. இதில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விமான நிலைய இயக்குநர் முத்துக்கமார், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் கூறுகையில் மதுரை ஏர்போர்ட்னுடைய அடுத்தகட்ட வளர்ச்சியில, இந்த புதிய அரசு மிக பெரிய அளவில் வேகமாக, மக்களை பாதிக்காத அளவிலும், அதே நேரத்தில் மக்களுடைய தேவைகளை உணர்ந்தும், மதுரை ஏர்போர்ட்டுக்குள் வளர்ச்சிப் பணிகளை பற்றி ஆய்வு செய்தோம். சில விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து மதுரைக்கு புதிய விமானங்கள் வர வேண்டும் என்பதும், அதே நேரத்தில், சில மக்களை பாதிக்காத அளவில் இந்த திட்டத்தை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றியும் பேசுவோம். நிலம் கையகப்படுத்தல் பணி 97% நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்; அதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தினுடைய வளர்ச்சியில மாநில அரசு தன்னுடைய பங்காக, பஸ் பெசிலிட்டிஸ் உருவாக்குறதா இருந்தாலும் சரி, மற்றும் சுற்றுலாத் துறையினுடைய வளர்ச்சியா இருந்தாலும் சரி, அது அனைத்தையும் அமைச்சர் முதல்முறையாக இந்த குழுவுல இருக்கிறதுனால, மதுரை விமான நிலையத்தினுடைய குழுவுல பல ஆண்டுகளுக்கு பின்னால—ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு அமைச்சர் இந்த குழுவுல இருக்கிறார் என்பதால் இந்த வளர்ச்சி பணி வேகப்படும். இது ஒரு நிறைவைத் தருகிறது. மதுரை விமான நிலையத்தினுடைய வளர்ச்சிப் பணிகள் சரியான திசையில் போக ஆரம்பிச்சிருக்கு. அதே மாதிரி, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள்ள மதுரையினுடைய புதிய ரிங் ரோடு அமைப்பதற்கான பணி முடிவடையும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதற்கு பிறகு தான் மதுரையினுடைய ரன்வே எக்ஸ்பான்ஷன் நடக்கும். ஆக மொத்தம், இது ஏறக்குறைய இன்னும் ஒரு இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மதுரையினுடைய ரன்வே எக்ஸ்பான்ஷன் எல்லாம் ஒரு நிலைக்கு வரும் என்கிற நம்பிக்கை இருக்கு. சர்வதேச விமானங்கள் வந்து ரத்து செய்யப்பட்டிருக்குதா? சர்வதேச விமான நிலையமா அறிவிக்கப்பட்டதுக்கு அப்புறம், இரண்டு மூணு விமானங்கள்... சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயர் இருக்கு, அதே மாதிரி துபாய்... ரத்து செய்யப்பட்டிருக்கு குறித்த கேள்விக்கு: ரெண்டுக்குமே வேற வேற காரணங்கள். முதலில் துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் ஓட பிரச்சனை, அந்த கம்பெனியோட பிரச்சனை. எல்லாமே லாபத்துக்காக வர்ற ஏர்லைன்ஸ். ஏர்லைன்ஸ் யாருமே ஃப்ரீயா நடத்தல. ஏர் இந்தியா முதல்ல வந்து கவர்மெண்ட் நடத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு ஆர்கனைசேஷனா இருக்கும் போது, அது வந்து நஷ்டத்துக்கு ஏற்படுத்தலாம், மக்களுடைய நலனுக்காக கொண்டு வரலாம். ஆனா இப்ப லாபத்துக்காகத்தான் எல்லா நிறுவனங்களும் வரப்போகுது. இதுல ஸ்பைஸ்ஜெட் அவர்களின் பிரச்சனைகளுக்காக துபாயில் சர்வீஸை கட் பண்ணிட்டாங்க. சிங்கப்பூர் போன கூட்டத்துக்கு முன்னாடியே நாங்க போய் பார்த்தோம். நானும் எம்.பி.யும் போய் பார்த்தோம். அவங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸினுடைய நிர்வாகிகளை... எம்.டி.யை போய் சென்னை, டெல்லியில பார்த்தோம். அப்பொழுது அவர்கள் சொன்னது, அவர்களுடைய டைம் ஸ்லாட்ஸ் சேஞ்ச் பண்ணதுனால மிக பெரிய அளவுல அதுல பேசஞ்சர் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. அதை திருச்சிக்கு மாத்திட்டாங்க. இப்ப திருப்பியும் போய் நாங்க ஏர் இந்தியா, மிக அதிர்ச்சியா இருந்தது என்னவென்றால், ஏர் இந்தியாவினுடைய express வர்ற ஃபிளைட்டை நிப்பாட்டிட்டு, ஏர் எக்ஸ்பிரஸா மாத்திட்டாங்க. இதெல்லாம் அரசாங்க நிலையில இருக்கும் போது இதெல்லாம் மாத்த விடாம ஆக்கலாம். இப்ப வந்து பிரைவேட் கம்பெனிங்கிறதுனால நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. நம்ம போய் கோரிக்கைதான் வைக்க முடியும். அவங்ககிட்ட சொல்ல முடியும் மார்க்கெட் இருக்குங்கிறதை. அதை இந்தத் தடவை மீண்டும் நானும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போய் ஏர் இந்தியாவினுடைய நிர்வாகத்தை சந்தித்து பேசுவோம். திருப்பரங்குன்றம் தொகுதி வந்து எய்ம்ஸும் கனவாவே இருக்கு, மதுரை விமான நிலைய விரிவாக்கமும் நீண்ட கனவாவே இருக்கு. அது எப்போது நடைமுறைக்கு வரும் அமைச்சர் வந்துட்டாருல்ல, அதனால இனிமே கனவு நனவாயிரும்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் போராடிக்கிட்டேதான் இருக்கோம். இப்ப உங்க எல்லாருக்கும் தெரியும், எய்ம்ஸைப் பொறுத்தவரைக்கும் 80% எப்பவோ முடிச்சிட்டாங்க. 2022-லேயே முடிச்சிட்டாங்க. எய்ம்ஸினுடைய 80% நட்டா வந்து அனவுன்ஸ் பண்ணாரு. இப்பதான் 80% வந்துருக்காம், 85% முடிஞ்சிருக்கு. எய்ம்ஸையும் போய் ஒரு தடவை நடுவுல ஆய்வு செஞ்சு, அமைச்சரோட சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களோட போய் பார்த்து அதையும் அப்டேட் பண்ணுவோம். எங்களைப் பொறுத்தமட்டிலும் எய்ம்ஸும் சரி, மதுரை ஏர்போர்ட்டும் சரி மிக முக்கியமானது இந்த திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய வளர்ச்சியில. அதே மாதிரி மதுரையினுடைய, தென் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில இது ரெண்டும் பெரிய மைல்ஸ்டோன். இது இரண்டையும் நிறைவேற்ற வைக்க வேண்டியது எங்க எல்லாரோட கடமை." இந்த மீட்டிங்ல வந்து பிசினஸ் பீப்பிள்ஸ் யாராவது கலந்துகிட்டாங்களா? ஏன்னா இங்க கார்கோ மூலமா இம்போர்ட், எக்ஸ்போர்ட் வந்து அவங்கதான் ரொம்ப பெரிய அளவுல எதிர்பார்த்தாங்க இன்டர்நேஷனல் அந்தஸ்து வந்தா. அவங்ககிட்ட எதுவும் மீட்டிங்ல கன்சல்ட் பேசினாங்களா எல்லாருக்கும் மெம்பர் புதுசா மெம்பர்ஷிப் போட்டிருக்கோம். மெம்பர்ஸ் ஆட் பண்ணிருக்கோம். சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து ஜெகதீசன் அதுல அதனுடைய பிரதிநிதியா இருக்காரு. விருதுநகர் சேம்பர்ல இருந்து ஸ்ரீராம் ராஜா சார் இருக்காரு. இந்த முறை போன வருடங்களை விட இந்தத் தடவை கார்கோவினுடைய நம்பர்ஸ் வந்து கூடியிருக்கு. மத்த எல்லாத்துலயும் பேசஞ்சர்ஸோட நம்பர் குறைஞ்சிருக்கு. ஏன் கேட்டீங்கன்னா ஏ.டி.ஆர். ஃபிளைட் குறைஞ்சதுனால, பெரிய ஃபிளைட்ஸ் வந்ததுனாலயும்... பெரிய கேப் இருக்கு, அதனால அதை வந்து ஒரு 10,000 பேசஞ்சர்ஸோட இந்தத் தடவை ஃபுட்பால் வந்து குறைஞ்சிருக்கு. விரிவாக்கத்திற்காக இந்த ரோடும் மாற்றி அமைக்கப்படுமா? இல்ல அண்டர்கிரவுண்ட் பாஸ் மாதிரி போகுதா அதைத்தான் நான் சொன்னேன். புதிய ரிங் ரோடு அமைக்கின்ற பணி இன்னும் ரெண்டு வருஷத்துல கம்ப்ளீட் பண்ணிருவோம். அதனால ரோடுதான் அமைக்கப்போறாங்க... ரிங் ரோடுதான் அமைக்கப்போறாங்க. கம்பிகுடி கால்வாய்... அதை மாற்றும் திட்டத்துல கொண்டு வந்திருக்கீங்களா? அந்த புராஜெக்ட் இதுல இல்லையா எல்லாமே ஒரு நிலைக்கு வந்துகிட்டு இருக்கு. இப்ப அமைச்சர் வந்திருக்கிறதுனால அது எல்லாத்தையும் கொஞ்சம் ஃபாஸ்ட் பண்ணி, மக்களை பாதிக்காத அளவுல அதை கொண்டு வருவதற்காக அமைச்சர் இருக்காரு. பணிகள் எப்போது தொடங்கும் சார்? இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள அந்த ரிங் ரோடு முடிப்பதற்கான வாய்ப்பு நிறைய இருக்கு. அதற்கான கொஞ்சம் பொறுமையா இருக்கணும் நம்ம. இப்பதான் கொஞ்சம் ஸ்ட்ரக்ச்சருக்கு வந்துருக்கு. அதனால நம்ம எல்லாரோட முயற்சியால அது நல்லபடியா நடக்கும். சின்ன உடைப்பு மக்கள் வந்து தொடர்ந்து போராட்டம்... அவங்க சொந்தக்காரங்களுக்குலாம், அதாவது அங்க உறவினர்களுக்கு பட்டா கேட்கிற பிரச்சனை நடந்துட்டு இருக்கு. இப்ப மாவட்ட நிர்வாகமும் கொடுக்குறாங்க, இப்ப நம்ம அதை எந்த அளவுக்கு சீக்கிரம் வந்து அவங்களை அங்கிருந்து வெளியேற்றுற முயற்சிகள் இருக்கு? சின்ன உடைப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே மக்கள்ட்ட பேசி அவங்களே ஒரு சில இடத்துல இடம் கேட்டுருக்காங்க. அதை ஆய்வு செஞ்சு அதுக்கு தேவையான. அந்த இடத்தை மாற்றாக கொடுப்பதற்கான ஆய்வு செய்யப்படுகிறது. ரொம்ப சீக்கிரம் சுமுகமா முடிந்து விடும் என கூறினார்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.1
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது1
- திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் வீடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தவெக நிர்வாகியை, திமுகவை சேர்ந்த 5 பேர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புறம் கீழ புதுகுடியை சேர்ந்த பீட்டர்(48). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் திருச்செந்தூர் மேற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் வீட்டின் அருகில் உள்ள திமுகவை சேர்ந்த ஞானராஜ் என்பவருக்கும், பீட்டருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பீட்டர் கடந்த 10-ம் தேதி காலையில் தனது மகனை அம்மன்புரத்தில் பஸ் ஏற சென்று விட்டு விட்டு வீடு திரும்பியபோது அங்குள்ள சர்ச் நுழைவாயில் அருகே சென்றதில் ஞானராஜ் தம்பி மகன் ஆல்வின் மற்றும் அவருடன் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நான்கு பேர் உட்பட மொத்தமா ஐந்து பேர் பீட்டர் இருசக்கர வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதில் காயமடைந்த பீட்டர் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஐந்து பேரை தேடி வருகின்றனர்.2
- வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை முல்லை ஆற்றில் கரைத்தனர் தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னனியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னனியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினார்கள். விழாவினை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை வைத்து அருகம்புல், எரிக்கலை மற்றும் கொளுக்கட்டைகளை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தும் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் மிக விமர்சையாக வழிபாடுகளை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் போது சாலையின் இரு புறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு பிரசாதமாக பொறி கடலைகளை வழங்கிச் சென்று முல்லைப் பெரியாற்றில் விநாயகரின் திரு உருவமேனி சிலைகளை கரைத்தனர். விழாவில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு .... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், பள்ளியின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் கல்வி நிலை, வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியின் சமையலறைக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவை சாப்பிட்டு அதனுடைய தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்பு பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து தேவையான நடவடிக்கையில் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.பின்பு அப்பகுதியில் பனை மர விதைகள் நடும் பணியை துவக்கி வைத்து வைத்தார்1