சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை முல்லை ஆற்றில் கரைத்தனர் தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னனியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னனியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினார்கள். விழாவினை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை வைத்து அருகம்புல், எரிக்கலை மற்றும் கொளுக்கட்டைகளை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தும் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் மிக விமர்சையாக வழிபாடுகளை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் போது சாலையின் இரு புறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு பிரசாதமாக பொறி கடலைகளை வழங்கிச் சென்று முல்லைப் பெரியாற்றில் விநாயகரின் திரு உருவமேனி சிலைகளை கரைத்தனர். விழாவில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை முல்லை ஆற்றில் கரைத்தனர் தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னனியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னனியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினார்கள். விழாவினை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை வைத்து அருகம்புல், எரிக்கலை மற்றும் கொளுக்கட்டைகளை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தும் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் மிக விமர்சையாக வழிபாடுகளை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் போது சாலையின் இரு புறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு பிரசாதமாக பொறி கடலைகளை வழங்கிச் சென்று முல்லைப் பெரியாற்றில் விநாயகரின் திரு உருவமேனி சிலைகளை கரைத்தனர். விழாவில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.1
- திண்டுக்கல்லில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான குடை பறைபட்டியிலிருந்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக வருடம் தோறும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது1
- சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது மேலும் சாத்தூர் நகர் பகுதி மற்றும் அமீர்பாளையம் வெங்கடாசலபுரம் சடையம்பட்டி சத்திரப்பட்டி மேட்டுப்பட்டி மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதனால் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது1
- பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்1
- திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் 91 சிலைகளும் அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி சார்பில் தலா 7 சிலைகளும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 105 விநாயகர் சிலைகள் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து பக்தி இன்னிசை முழங்க பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிலைகள் வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் முருகன் கோவில் கடலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. கடல் உள்வாங்கி காணப்பட்டதால் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கடக்கிற அருகிலே சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.1
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொட்டித் தீர்த்த கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று எதிர்பாராத விதமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், லோயர் கேம்ப், உத்தமபாளையம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் திடீரென மேகமூட்டம் திரண்டு வந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முக்கிய விவசாய மண்டலமாகத் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள திராட்சைத் தோட்டங்கள், தென்னை, வாழை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இந்த மழை மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்துள்ள இந்த மழை, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்பதால் விவசாயிகள் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தொடர் வெயிலால் அவதிப்பட்டு வந்த கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு இந்தத் திடீர் மழை வெப்பத்தைத் தணித்து, இதமான குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- தேனி மாவட்டம் போடியில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளால் அமைதியாக நடந்த ஆன்மீகப் பெருவிழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் வெகு சிறப்பாகவும் ஆன்மீக உணர்வுடனும் நடைபெற்றது. கேரளா செண்டை மேளம், கைலாய வாத்தியம், பேண்ட் செட்டுகள் முழங்க, முளைப்பாரி மற்றும் கரகாட்டத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. போடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேட்டவராயன் கோவில் கொட்டகுடி ஆற்றைச் சென்றடைந்து, அங்கு சிலைகள் முறைப்படி கரைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கிகளில் ஆபாசப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆண்டு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 11 அடி விநாயகர் சிலை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியைக் காவல்துறையினர் உடனடியாக அகற்றக் கோரினர். காவல்துறையின் இந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, முந்தைய ஆண்டை விடக் குறைவான வாகனங்களே பங்கேற்ற போதிலும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் அமைதியாகவும் பக்திப் பெருக்குடனும் நிறைவுற்றது.1
- திண்டுக்கல்லில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் சிலை திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலை கடந்தது1