மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது1
- பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்1
- தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு....! விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சந்தனபாண்டியன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது ....இதில் முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது பேசிய அவர் அதிமுக வெற்றியை தவறவிட்டாலும் இந்த இயக்கதையும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தவும் இன்றைக்கும் லட்சோப லட்சம் தொண்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறார்கள் அதிமுக என்பது பல்வேறு சாதனைகளை செய்த இயக்கம் ஏழை மக்கள், இல்லாத மக்கள், பாட்டாளி மக்கள் பட்டாசு தொழிலாளர்களுக்காக பல தியாகங்களை செய்து அவர்களது வாழ்க்கை முன்னேற பாடுபட்ட இயக்கம் அதிமுக இயக்கம் அப்படிப்பட்ட இயக்கத்தில் இருப்பது பெருமை, இயக்கத்திற்கு உழைப்பது பெருமை, இயக்கத்தில் இருந்து மடிவது பெருமை, இருக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கௌரவிப்பது மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது கடமை கடந்த 53 ஆண்டு காலம் அதிமுக இயக்கம் யாரைக்கண்டும் பயப்படவில்லை, யாரைக்கண்டும் ஓடி ஒடியவில்லை, திமுக என்ற திமிங்கலத்தையே எதிர்த்து அடித்து நொறுக்கி வளர்ந்த அதிமுக தற்குறிகளை கண்டு ஒழிந்து, அழிந்து போகாது விஜய் விபத்தில் முதலமைச்சரானவர் 107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டு மட்டுமே அவர்களிடம் உள்ளது தவெக ஒட்டுச்சுவரில் உலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார் அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பில்லாமல் 3 நாட்கள் கழித்துதான் பதில் சொல்வேன் என சொல்லி எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டு சென்றுள்ளார் தமிழக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வு குறித்து பேசி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார் சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுக்கமாக பேசுவதில்லை, வேளாண்துறை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார், யார் யாரோ பதில் சொல்கிறார்கள் இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்குமா? பலம் பொருந்திய அதிமுக, மதம் கொண்ட யானையான திமுகவை வீழ்த்தி அமுக்கிய இயக்கம் அதிமுக அதிமுகவை உங்களால் அழிக்க முடியுமா? அதிமுகவை பார்த்து கைகட்டி நின்றவர்களேல்லாம் இன்றைக்கு சட்டமன்றத்தில் ஜெயித்து விட்டோம் என்பதற்காக எள்ளி நகையாடினால் தமிழக மக்கள் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் பட்டாசுக்கு பிரச்சனை வந்த நேரத்தில் டெல்லி வரை சென்று பாதுகாத்தவர்கள் எடப்பாடியார் பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள், பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும் தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அடிப்படையில் முழக்கமிட்டவர்கள் நாங்கள், அதிமுக போராட்டம் அறிவித்த பின்னர் தான் மற்ற கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு இவ்வளவு பிரச்சனை வந்ததில்லை, இவ்வளவு விபத்தும் நடக்கவில்லை பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள் தவெக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்படுகிறது அதிமுகவின் போராட்ட அறிவுப்புக்கு தவெக அரசு பணிந்து பட்டாசு ஆலைகளை திறந்துள்ளது அதிமுக என்றாலும் தோற்றாலும் என்றைக்கும் சிவகாசி பகுதி மக்களுக்காக உழைப்போம் தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் தவெகவினர் யோக்கியம் போல் நினைத்துக் கொண்டு அனைவரையும் குற்றம் சொல்கிறார்கள், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாண்டி கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூபாய் தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்துருந்தார், இதை யாரிடம் கேட்க லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால் அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் இந்த வேலையை செய்யவா இவரை முதல்வராக தேர்வு செய்தோம்? ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியவில்லை தவெகவிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் திடாவிட இயக்கத்தின் ஆட்சிகளில்தான் தமிழகம் வளர்ந்துள்ளது பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம் இயக்கம் ஆரம்பித்த 53 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆண்டுள்ளது முல்லைப்பெரியாறு, காவிரி, நீட், கொரோணா, கஜா புயல் போன்ற பிரச்சனைகள் வந்த காலங்களில்ளெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து காவலாக நின்ற கட்சி அதிமுக ஏழை மாணவர்கள் இன்று மருத்துவராக அடிப்படை காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்த வரலாறு அதிமுக கட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் உள்ளது இதில் ஏதாவது ஒரு வரலாறு திமுகவிற்கோ தவெகவிற்க்கோ உள்ளதா? தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை தவெகவினர் விபத்து நடந்த இடத்திலும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இடத்திலும் ரீல்ஸ் போடுகிறார்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் அங்கு சென்று ரிலீஸ் போடுகிறார்கள் தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள், எங்கே போய் முடிய போகிறது என்பதே தெரியவில்லை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், ஆடு மாடு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார், ஆனால் தவெக ஆட்சியில் இதுவரை எதுவுமே கொடுக்கவும் இல்லை எதையும் அறிவிக்கவும் இல்லை, விஜய் வந்தால் ஏதாவது கொடுப்பார் என மக்கள் நம்பினார்கள் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசும்போது மக்களுக்கான நல்ல பல திட்டங்களை அறிவிப்பார்கள் ஆனால் தற்போது 110 விதியின் கீழ் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள் தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின் வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள் தவெக ஆட்சி அவமானத்தின் ஆட்சியாக இருக்கிறது, இந்த ஆட்சி நாட்டுக்கு தேவையா? என மக்கள் தற்போதைய பேச துவங்கி விட்டார்கள் இடைத்தேர்தலில் தவெக எப்படி வெற்றிபெருவார்கள் என பார்ப்போம் அதிமுக வேட்பாளர்கள் லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறப் போவது உறுதி அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு இன்றைக்கும் இருக்கிறது அதிமுகவை தூக்கிப் பிடிப்பதற்கு ஏழை மக்களும், பாட்டாளி மக்களும் தயாராக உள்ளனர் அதிமுகதான் மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டும் தான் மக்களுக்கு உதவும் இயக்கம், திமுக தங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கும், தவெக விஜய் யாருக்காக உழைக்கிறார் என்றே தெரியவில்லை, எதற்காக முதல்வரானார் என்றே தெரியவில்லை, முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை மாலை 6 மணிக்கு மேல் முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை ஒரு முதல்வரை 6:00 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றால் நாட்டில் என்ன பிரச்சனை என்பதை யார் கண்டறிவது வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.1
- கன்னிவாடி அருகே கிணற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சோமலிங்க சுவாமி கோவில் செல்லும் வழியில் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உரை அமைக்கும் பணி மேற்கொள்ள கிணற்றுக்குள் இறங்கிய பெரியகுளம், கல்லுப்பட்டி சேர்ந்த ஈஸ்வரன்(32) என்பவர் கம்பி வடம் அறுந்து விழுந்ததில் கிணற்றுக்குள் சென்ட்ரிங் கம்பி உடலில் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புதுறையினர் கம்பியை அறுத்து மீட்பு வலையை பயன்படுத்தி ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்1
- விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)1
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.1