Shuru
Apke Nagar Ki App…
முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
Kavin
முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.1
- காரைக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.1
- பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்1
- தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்1
- மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவத்தின் பின்னணி: மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சாலை மறியல் போராட்டம்: விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது1
- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள் உலக ஓசோன் இனத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே நான் தான் குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து உலக ஓசான் தின விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும் மரம் வளர்க்க வேண்டும் மழை பெற வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்கள் வாசித்தனர்1