logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்

2 hrs ago
user_நாகராஜ் பெரியசாமி பிள்ளை
நாகராஜ் பெரியசாமி பிள்ளை
நத்தம், திண்டுக்கல், தமிழ்நாடு•
2 hrs ago

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் ⚡ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மின் கம்பங்கள் சீரமைக்க வேண்டுகோள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், செந்துறை ஊராட்சி பகுதியில், பத்திர ஆபீஸ் அருகிலும், மரம் மில் பக்கத்திலும், விஜயா டைல்ஸ் ஷோரூம் அருகிலும் அமைந்துள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, எதிர்பாராத மின் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் தேவையான மின் உபகரணங்களை விரைவாக சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது குற்றச்சாட்டு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுக்கும் அன்பான வேண்டுகோள். 🙏 செந்துறை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள். நாகராஜு பெரியசாமி பிள்ளை சர்வதேச மனித உரிமைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகசிவா சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் — Managing Director செந்துறை ஊராட்சி தலைவர் வேட்பாளர்

More news from Dindigul and nearby areas
  • திண்டுக்கல்லில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான குடை பறைபட்டியிலிருந்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக வருடம் தோறும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது
    1
    திண்டுக்கல்லில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான குடை பறைபட்டியிலிருந்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக வருடம் தோறும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
  • தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    1
    தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • காரைக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.
    1
    காரைக்குடி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்னதானம் :
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி விநாயக சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்
    1
    தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு....! விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சந்தனபாண்டியன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது ....இதில் முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது பேசிய அவர் அதிமுக வெற்றியை தவறவிட்டாலும் இந்த இயக்கதையும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தவும் இன்றைக்கும் லட்சோப லட்சம் தொண்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறார்கள் அதிமுக என்பது பல்வேறு சாதனைகளை செய்த இயக்கம் ஏழை மக்கள், இல்லாத மக்கள், பாட்டாளி மக்கள் பட்டாசு தொழிலாளர்களுக்காக பல தியாகங்களை செய்து அவர்களது வாழ்க்கை முன்னேற பாடுபட்ட இயக்கம் அதிமுக இயக்கம் அப்படிப்பட்ட இயக்கத்தில் இருப்பது பெருமை, இயக்கத்திற்கு உழைப்பது பெருமை, இயக்கத்தில் இருந்து மடிவது பெருமை, இருக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கௌரவிப்பது மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது கடமை கடந்த 53 ஆண்டு காலம் அதிமுக இயக்கம் யாரைக்கண்டும் பயப்படவில்லை, யாரைக்கண்டும் ஓடி ஒடியவில்லை, திமுக என்ற திமிங்கலத்தையே எதிர்த்து அடித்து நொறுக்கி வளர்ந்த அதிமுக தற்குறிகளை கண்டு ஒழிந்து, அழிந்து போகாது விஜய் விபத்தில் முதலமைச்சரானவர் 107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டு மட்டுமே அவர்களிடம் உள்ளது தவெக ஒட்டுச்சுவரில் உலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார் அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பில்லாமல் 3 நாட்கள் கழித்துதான் பதில் சொல்வேன் என சொல்லி எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டு சென்றுள்ளார் தமிழக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வு குறித்து பேசி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார் சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுக்கமாக பேசுவதில்லை, வேளாண்துறை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார், யார் யாரோ பதில் சொல்கிறார்கள் இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்குமா? பலம் பொருந்திய அதிமுக, மதம் கொண்ட யானையான திமுகவை வீழ்த்தி அமுக்கிய இயக்கம் அதிமுக அதிமுகவை உங்களால் அழிக்க முடியுமா? அதிமுகவை பார்த்து கைகட்டி நின்றவர்களேல்லாம் இன்றைக்கு சட்டமன்றத்தில் ஜெயித்து விட்டோம் என்பதற்காக எள்ளி நகையாடினால் தமிழக மக்கள் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் பட்டாசுக்கு பிரச்சனை வந்த நேரத்தில் டெல்லி வரை சென்று பாதுகாத்தவர்கள் எடப்பாடியார் பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள், பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும் தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அடிப்படையில் முழக்கமிட்டவர்கள் நாங்கள், அதிமுக போராட்டம் அறிவித்த பின்னர் தான் மற்ற கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு இவ்வளவு பிரச்சனை வந்ததில்லை, இவ்வளவு விபத்தும் நடக்கவில்லை பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள் தவெக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்படுகிறது அதிமுகவின் போராட்ட அறிவுப்புக்கு தவெக அரசு பணிந்து பட்டாசு ஆலைகளை திறந்துள்ளது அதிமுக என்றாலும் தோற்றாலும் என்றைக்கும் சிவகாசி பகுதி மக்களுக்காக உழைப்போம் தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால் உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் தவெகவினர் யோக்கியம் போல் நினைத்துக் கொண்டு அனைவரையும் குற்றம் சொல்கிறார்கள், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாண்டி கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூபாய் தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்துருந்தார், இதை யாரிடம் கேட்க லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால் அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் இந்த வேலையை செய்யவா இவரை முதல்வராக தேர்வு செய்தோம்? ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியவில்லை தவெகவிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் திடாவிட இயக்கத்தின் ஆட்சிகளில்தான் தமிழகம் வளர்ந்துள்ளது பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம் இயக்கம் ஆரம்பித்த 53 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆண்டுள்ளது முல்லைப்பெரியாறு, காவிரி, நீட், கொரோணா, கஜா புயல் போன்ற பிரச்சனைகள் வந்த காலங்களில்ளெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து காவலாக நின்ற கட்சி அதிமுக ஏழை மாணவர்கள் இன்று மருத்துவராக அடிப்படை காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்த வரலாறு அதிமுக கட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் உள்ளது இதில் ஏதாவது ஒரு வரலாறு திமுகவிற்கோ தவெகவிற்க்கோ உள்ளதா? தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை தவெகவினர் விபத்து நடந்த இடத்திலும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இடத்திலும் ரீல்ஸ் போடுகிறார்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் அங்கு சென்று ரிலீஸ் போடுகிறார்கள் தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள், எங்கே போய் முடிய போகிறது என்பதே தெரியவில்லை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், ஆடு மாடு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார், ஆனால் தவெக ஆட்சியில் இதுவரை எதுவுமே கொடுக்கவும் இல்லை எதையும் அறிவிக்கவும் இல்லை, விஜய் வந்தால் ஏதாவது கொடுப்பார் என மக்கள் நம்பினார்கள் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசும்போது மக்களுக்கான நல்ல பல திட்டங்களை அறிவிப்பார்கள் ஆனால் தற்போது 110 விதியின் கீழ் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள் தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின் வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள் தவெக ஆட்சி அவமானத்தின் ஆட்சியாக இருக்கிறது, இந்த ஆட்சி நாட்டுக்கு தேவையா? என மக்கள் தற்போதைய பேச துவங்கி விட்டார்கள் இடைத்தேர்தலில் தவெக எப்படி வெற்றிபெருவார்கள் என பார்ப்போம் அதிமுக வேட்பாளர்கள் லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறப் போவது உறுதி அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு இன்றைக்கும் இருக்கிறது அதிமுகவை தூக்கிப் பிடிப்பதற்கு ஏழை மக்களும், பாட்டாளி மக்களும் தயாராக உள்ளனர் அதிமுகதான் மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டும் தான் மக்களுக்கு உதவும் இயக்கம், திமுக தங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கும், தவெக விஜய் யாருக்காக உழைக்கிறார் என்றே தெரியவில்லை, எதற்காக முதல்வரானார் என்றே தெரியவில்லை, முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை மாலை 6 மணிக்கு மேல் முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை ஒரு முதல்வரை 6:00 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றால் நாட்டில் என்ன பிரச்சனை என்பதை யார் கண்டறிவது வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
    1
    தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால்  உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு....!

விருதுநகர் மாவட்டம் 
சிவகாசியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சந்தனபாண்டியன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது ....இதில் முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது பேசிய அவர்
அதிமுக வெற்றியை தவறவிட்டாலும் இந்த இயக்கதையும்  எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தவும் இன்றைக்கும்  லட்சோப லட்சம் தொண்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறார்கள் 
அதிமுக என்பது பல்வேறு சாதனைகளை செய்த இயக்கம் 
ஏழை மக்கள், இல்லாத மக்கள், பாட்டாளி மக்கள் 
பட்டாசு தொழிலாளர்களுக்காக பல தியாகங்களை செய்து அவர்களது வாழ்க்கை முன்னேற பாடுபட்ட இயக்கம் அதிமுக இயக்கம் 
அப்படிப்பட்ட இயக்கத்தில் இருப்பது பெருமை, இயக்கத்திற்கு உழைப்பது பெருமை, இயக்கத்தில் இருந்து மடிவது பெருமை, இருக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கௌரவிப்பது மாவட்டச் செயலாளர் என்ற முறையில் எனது கடமை
கடந்த 53 ஆண்டு காலம் அதிமுக இயக்கம் யாரைக்கண்டும் பயப்படவில்லை, யாரைக்கண்டும் ஓடி ஒடியவில்லை,  திமுக என்ற திமிங்கலத்தையே எதிர்த்து அடித்து நொறுக்கி வளர்ந்த அதிமுக தற்குறிகளை கண்டு ஒழிந்து, அழிந்து போகாது 
விஜய் விபத்தில் முதலமைச்சரானவர்
107 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 106 சீட்டு மட்டுமே அவர்களிடம் உள்ளது
தவெக ஒட்டுச்சுவரில் உலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், எந்த நேரத்தில் சுவர் விழும் என்பதே தெரியாது
ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? என்ற நிலையில்தான் இன்றைக்கு விஜய் இருக்கிறார்
அதற்குள் ஏன் இவ்வளவு ஆட்டம்,  ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என சாடிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்டால் பதில் சொல்ல துப்பில்லாமல் 3 நாட்கள் கழித்துதான் பதில் சொல்வேன் என சொல்லி எழுதியதை கண்ணாடி முன் நின்று பேசி பழகி அதை சட்டமன்றத்தில் ஒப்புவித்து வசனம் பேசிவிட்டு சென்றுள்ளார்
தமிழக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் அதைப் பற்றி பேசாமல் 20 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வு குறித்து பேசி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார்
சட்டமன்றத்தில் விஜயின் நாடகம் மட்டுமே நடக்கிறது, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிதான் நடக்கிறது
சட்டமன்றத்தில் எந்த அமைச்சரும் ஒழுக்கமாக பேசுவதில்லை, வேளாண்துறை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார், யார் யாரோ பதில் சொல்கிறார்கள்
இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்குமா?
பலம்  பொருந்திய அதிமுக,  மதம் கொண்ட யானையான திமுகவை வீழ்த்தி அமுக்கிய இயக்கம் அதிமுக
அதிமுகவை உங்களால் அழிக்க முடியுமா?  
அதிமுகவை பார்த்து கைகட்டி நின்றவர்களேல்லாம் இன்றைக்கு சட்டமன்றத்தில் ஜெயித்து விட்டோம் என்பதற்காக எள்ளி நகையாடினால் தமிழக மக்கள் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் 
பட்டாசுக்கு பிரச்சனை வந்த நேரத்தில் டெல்லி வரை சென்று பாதுகாத்தவர்கள் எடப்பாடியார் 
பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு 10 முறை ஆய்வு செய்தால் பட்டாசு தொழிலாளர்கள் எப்படி பிழைப்பார்கள், பட்டாசு உற்பத்தி எப்படி நடக்கும் 
தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 260 பட்டாசு ஆலைகளை மூடியது 
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க அடிப்படையில் முழக்கமிட்டவர்கள் நாங்கள், அதிமுக போராட்டம் அறிவித்த பின்னர் தான் மற்ற கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு இவ்வளவு பிரச்சனை வந்ததில்லை, இவ்வளவு விபத்தும் நடக்கவில்லை
பட்டாசு தொழிலாளர்கள் தற்போது அதிகாரிகளின் ஆய்வுக்கு அஞ்சி பதற்றத்தில் வேலை பார்க்கிறார்கள்
தவெக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக வெடி விபத்து ஏற்படுகிறது 
அதிமுகவின் போராட்ட அறிவுப்புக்கு தவெக அரசு பணிந்து பட்டாசு ஆலைகளை திறந்துள்ளது
அதிமுக என்றாலும் தோற்றாலும் என்றைக்கும் சிவகாசி பகுதி மக்களுக்காக உழைப்போம்
தவெக ஆட்சியில் எங்கேயாவது லஞ்சம் வாங்க நினைத்தால் அதை கண்டுபிடிக்க தனி குழு அமைத்துள்ளோம், லஞ்சம் வாங்கும் போது சிக்கிவிட்டால்  உங்கள் பாணியிலேயே பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் 
தவெகவினர்  யோக்கியம் போல் நினைத்துக் கொண்டு அனைவரையும் குற்றம் சொல்கிறார்கள், 
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாண்டி கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை 
ஆட்சிக்கு வந்தவுடன் 2500 ரூபாய் தருவதாக முதல்வர் விஜய் தெரிவித்துருந்தார், இதை யாரிடம் கேட்க
லண்டனில் தொழில் முதலீடு செய்ய முதல்வரை அனுப்பினால் அவர் அங்கு சென்று முதலீடு ஈர்க்காமல் வேறு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் 
இந்த வேலையை செய்யவா இவரை முதல்வராக தேர்வு செய்தோம்?
ஏன் விஜய்க்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியவில்லை
தவெகவிற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்
திடாவிட இயக்கத்தின் ஆட்சிகளில்தான் தமிழகம் வளர்ந்துள்ளது 
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம்
இயக்கம் ஆரம்பித்த 53 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆண்டுள்ளது
முல்லைப்பெரியாறு, காவிரி, நீட், கொரோணா, கஜா புயல் போன்ற பிரச்சனைகள் வந்த காலங்களில்ளெல்லாம் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து காவலாக நின்ற கட்சி அதிமுக 
ஏழை மாணவர்கள் இன்று  மருத்துவராக அடிப்படை காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான்
இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்த வரலாறு அதிமுக கட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் உள்ளது
இதில் ஏதாவது ஒரு வரலாறு  திமுகவிற்கோ தவெகவிற்க்கோ உள்ளதா?
தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை
தவெகவினர் விபத்து நடந்த இடத்திலும், இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இடத்திலும் ரீல்ஸ் போடுகிறார்கள்
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் அங்கு சென்று ரிலீஸ் போடுகிறார்கள்
தவெகவில் ரீல்ஸ் பைத்தியங்களாக உள்ளார்கள், எங்கே போய் முடிய போகிறது என்பதே தெரியவில்லை
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம், ஆடு மாடு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார், ஆனால் தவெக ஆட்சியில் இதுவரை எதுவுமே கொடுக்கவும் இல்லை எதையும் அறிவிக்கவும் இல்லை,
விஜய் வந்தால் ஏதாவது கொடுப்பார் என மக்கள் நம்பினார்கள் 
110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசும்போது மக்களுக்கான நல்ல பல திட்டங்களை அறிவிப்பார்கள் 
ஆனால் தற்போது 110 விதியின் கீழ் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை
தவெக ஆட்சிக்கு வந்த 126 நாட்களில் 36 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள்
தமிழகத்தில் தற்போது அறிவிப்பில்லா மின் வெட்டால் மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்
தவெக ஆட்சி அவமானத்தின் ஆட்சியாக இருக்கிறது, இந்த ஆட்சி நாட்டுக்கு தேவையா? என மக்கள் தற்போதைய பேச துவங்கி விட்டார்கள்
இடைத்தேர்தலில் தவெக எப்படி வெற்றிபெருவார்கள் என பார்ப்போம் 
அதிமுக வேட்பாளர்கள் லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறப் போவது உறுதி
அதிமுகவிற்கு மக்களின் ஆதரவு இன்றைக்கும் இருக்கிறது
அதிமுகவை தூக்கிப் பிடிப்பதற்கு ஏழை மக்களும், பாட்டாளி மக்களும் தயாராக உள்ளனர்
அதிமுகதான் மக்களுக்கான இயக்கம்
அதிமுக மட்டும் தான் மக்களுக்கு உதவும் இயக்கம், திமுக தங்கள் குடும்பத்தை மட்டுமே பார்க்கும், தவெக விஜய் யாருக்காக உழைக்கிறார் என்றே தெரியவில்லை, எதற்காக முதல்வரானார் என்றே  தெரியவில்லை, முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை 
மாலை 6 மணிக்கு மேல் முதல்வரை யாரும் பார்க்க முடிவதில்லை
ஒரு முதல்வரை 6:00 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என்றால் நாட்டில் என்ன பிரச்சனை என்பதை யார் கண்டறிவது
வருகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    2 hrs ago
  • வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    1
    வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 
கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை 
புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி 
தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 
சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து 
போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் 
குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல்லில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் சிலை திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலை கடந்தது
    1
    திண்டுக்கல்லில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் சிலை திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலை கடந்தது
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
  • உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள் உலக ஓசோன் இனத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே நான் தான் குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து உலக ஓசான் தின விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும் மரம் வளர்க்க வேண்டும் மழை பெற வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்கள் வாசித்தனர்
    1
    உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள்
உலக ஓசோன் இனத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே நான் தான் குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து உலக ஓசான் தின விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும் மரம் வளர்க்க வேண்டும் மழை பெற வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்கள் வாசித்தனர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில்,  செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு  சிறப்பு 
சிவகங்கை மாவட்டம் 
காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள 
ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில்,  செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு  சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.