Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான குடை பறைபட்டியிலிருந்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக வருடம் தோறும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது
RAJA news
திண்டுக்கல்லில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான குடை பறைபட்டியிலிருந்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக வருடம் தோறும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் போடியில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளால் அமைதியாக நடந்த ஆன்மீகப் பெருவிழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் வெகு சிறப்பாகவும் ஆன்மீக உணர்வுடனும் நடைபெற்றது. கேரளா செண்டை மேளம், கைலாய வாத்தியம், பேண்ட் செட்டுகள் முழங்க, முளைப்பாரி மற்றும் கரகாட்டத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. போடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேட்டவராயன் கோவில் கொட்டகுடி ஆற்றைச் சென்றடைந்து, அங்கு சிலைகள் முறைப்படி கரைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது ஒலிபெருக்கிகளில் ஆபாசப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த ஆண்டு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 11 அடி விநாயகர் சிலை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியைக் காவல்துறையினர் உடனடியாக அகற்றக் கோரினர். காவல்துறையின் இந்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக, முந்தைய ஆண்டை விடக் குறைவான வாகனங்களே பங்கேற்ற போதிலும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் அமைதியாகவும் பக்திப் பெருக்குடனும் நிறைவுற்றது.1
- தங்கம்மாள் புரத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடத்தோடு வருசநாடு சாலையில் மறியல் போராட்டம் *கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இரண்டுபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டுபுறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.1
- கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.1
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், பக்தர்களுக்காக 2,000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வரும் வழித்தடங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அறங்காவலர்கள் தங்களுடைய பணிகளைச் செய்வதை அரசு தடுக்கவில்லை என்றும், அவர்களின் தேவைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல், பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை என்றும், பொதுப்பணித்துறையின் ஆய்வின் அடிப்படையில் நுழைவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2,000 பேருந்துகள் இயக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது1
- மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவத்தின் பின்னணி: மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சாலை மறியல் போராட்டம்: விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.1
- திண்டுக்கல்லில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் சிலை திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலை கடந்தது1
- காட்டுப்பன்றியை வேட்டையாடிய வடமாநில தொழிலாளர்கள் 5 பேருக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் வனத்துறை நடவடிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட முருகமலை காப்புக் காட்டிற்கு அருகில், முருகமலை நகர் சாலையில் இயங்கி வரும் தனியார் கயிறு தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் கம்பி வலை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில், அத்தொழிலாளர்கள் கம்பி கண்ணி வைத்து காட்டுப்பன்றி ஒன்றை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வேட்டையாடிய வண்டியை பறிமுதல் செய்ததோடு வேட்டையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்சுகல்குமார் (30ரவிக்குமார் (24) சுபோத்சிங் (42)கருமாஞ்சி (37) அணில்குமார் (24) எனத் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் 1972-ஆம் ஆண்டைய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரூபாய் 2 லட்சம் தண்டம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தை மீறி காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, பிடிபட்ட 5 பேருக்கும் தலா ரூபாய் 40,000 வீதம் மொத்தம் ரூபாய் 2,00,000 அபராதம் விதித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.1
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொட்டித் தீர்த்த கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று எதிர்பாராத விதமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், லோயர் கேம்ப், உத்தமபாளையம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் திடீரென மேகமூட்டம் திரண்டு வந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முக்கிய விவசாய மண்டலமாகத் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள திராட்சைத் தோட்டங்கள், தென்னை, வாழை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இந்த மழை மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்துள்ள இந்த மழை, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என்பதால் விவசாயிகள் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தொடர் வெயிலால் அவதிப்பட்டு வந்த கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு இந்தத் திடீர் மழை வெப்பத்தைத் தணித்து, இதமான குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1