Shuru
Apke Nagar Ki App…
கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Karur clicks
கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.1
- 118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை கரூர்: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.1
- ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.1
- தொட்டியம் பவளக்கடை வீதியில்இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் பவளக்கடை வீதியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு இரண்டாம் நாள் பூஜைகளும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது விநாயகருக்கு அருகம்புல் மாலை தேங்காய் வாழைப்பழம் பொங்கல் சுண்டல் வைத்து படைத்து வழிபட்டனர் நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கினர்1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவத்தின் பின்னணி: மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சாலை மறியல் போராட்டம்: விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1
- கொட்டித்தீர்த்த கனமழைஸ்டேட் பேங்க் காலனியில் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் மக்கள் அவதி. கரூர் மாவட்டத்தில் இன்று நேற்று இரவு காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு நேரத்தில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்பு சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்லவும், அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்லவும் சிரமம் ஏற்பட்டது. மேலும் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதனை பொதுமக்கள் வெளியேற்றினர். மேலும், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் மழைநீர் அதிகளவில் தேங்குவதாகவும், நீண்ட நேரம் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்தி, நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1