Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது1
- தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்லம்பட்டி மோப்பிரிப்பட்டி அச்சல்வாடி பெரியப்பட்டி மொரப்பூர் போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுக,தவெக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக நிர்வாகி விக்னேஷ் தலைமையில் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.புதியதாக இணைந்தவர்களுக்கு கழக துண்டினை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம்,பழனி, முருகன்,மருத்துவர் சந்திரமோகன்,ஐடி விங் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சேலத்தில் இருந்து கொடுமுடி நோக்கிச் சென்ற வந்த ஆம்னி வேனுக்குள்இருந்து திடீர் புகை எழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று காருக்குள் இருந்த பெண்களை மீட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடிக்காமல் தடுத்தனர். கேஸ் வண்டி என்பதால் திடீரென புகை எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரித்தபோதுகொடுமுடியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் இமாம் ஜாபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சேலத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஓட்டுநர், 5 பெண்கள் 2 குழந்தைகள் ஒரு குழுவினரும் மற்றவர்கள் ஒரு டெம்போ ட்ராவலர் வேனிலும் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது டெம்போ ட்ராவலர் வேன் முன்னால் சென்றுவிட பின்னால் அன்வர் அலியின் மருமகன் அக்பர்லி ஓட்டி வந்தஆம்னி வேன் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே வரும்போது ஆம்னி வேனுக்குள் திடீரென புகை எழ ஆரம்பித்தது உடனடியாக காரை அக்பர் அலி ஓரம் கட்டி நிறுத்திய நிலையில் புகையுடன் கார் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காரின் கதவுகளை திறந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு அருகில் அமர வைத்தனர்.அந்த வழியாக வந்த கார் மெக்கானிக் ஒருவர் கேஸ் வெடித்து தீ பரவாமல் தடுக்க கார் கேஸ் குழாயைதுண்டித்தார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக காருக்குள் இருந்து கீழே இறங்கி விடப்பட்ட ஐந்து பெண்கள் இரண்டு குழந்தைகளும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவர் கரிகாலன்உத்தரவன் பேரில், சிறப்பு உதவிநிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் தீ விபத்து ஏற்பட்டு விடாமல் பாதுகாத்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரை சாய்த்து காருக்குள் புகை வந்த இடம் முழுவதும் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.காருக்குள் காரை ஓட்டி வந்த அக்பர் அலி அவரது மனைவி,அன்வர் அலியின் மனைவியும், அக்பர் அலியின் மாமியார் மற்றும் அன்வர் அலியின் தங்கை தம்பி மகள்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர். அதில்காருக்குள் புகை எழுந்ததால் அன்வர் அலியின் மனைவி மிகவும் பதட்டமான நிலையில் காணப்பட்டார். உடனடியாகதகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் அவரை ஆசுவாசப் படுத்திய வேறு காரில் அவரை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.1
- *சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ.க, மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.க,வினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.க வினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.ஆர்.தவமணி தலைமையில் தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.1
- மணப்பாறை அருகே தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம். வருவாய்துறையினர் நேரில் ஆய்வு திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை அவ்வபோது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பொன்னக்கோன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆலீஸ் சோபியா ராணி (49) என்பவரின் வீட்டின் ஓட்டு வீட்டில் மேல் புறத்தில் இருந்து ஓடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் அவரும் அவரது மகனும் அருகில் உள்ள வீட்டில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் ஓடுகள் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதே போல் அருகில் ஜான்பால் என்பவரின் வீட்டின் மேல்புறத்தில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளும் சேதமடைந்ததை அடுத்து வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிகவும் வறுமையில் உள்ள நிலையில் தாங்கள் வீடு இடிந்து விட்டதால் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆலீஸ் சோபியா ராணி அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.1
- ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியநாராயணமூர்த்தி தலைமையில் பொங்கல் விழா கோலாகலம்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்1
- தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம். கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி 27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"1