*இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சாதி ரீதியாக ஒருத்தரப்பு மீது மட்டும் நடவடிக்கை எடுத்த போலீசார்* *ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் செய்த புதிய தமிழகம் கட்சியினர்* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு நகராட்சி அனுமதி இல்லை எனக்கூறி பேரிக்காடுகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனை அடுத்து போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 9 நபர்களை தேனி போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக புதிய தமிழக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியாவை சந்தித்து தங்கள் ஆட்டோ நிறுத்ததை செயல் படுத்து அனுமதி அளிக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர் பேருந்து நிலையப் பகுதியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்புக்கும் ஆட்டோ நிறுத்தம் உள்ள நிலையில் தங்கள் தரப்பை மட்டும் ஆட்டோ இயக்கக் கூடாது என போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் திமுகவினர் தூண்டுதலோடு சாதிய வன்மத்தோடு பல ஆண்டுகளாக ஆட்டோ இயக்கி வந்த தங்கள் ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி கொடுக்காமல் தங்களது கொள்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் தங்கள் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தனர்

- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது அமைச்சர் பேச்சு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- அழகான கருத்து உள்ள பாடல்.1
- தென்காசியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் சொந்த செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்கும் அறை திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் தலைமை வகித்து திறந்து வைத்தார்1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்1
- திண்டுக்கல் திமுகவில் இணைந்த தவெகவினர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தவெக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி தலைமையில் 37 நிர்வாகிகள் 300 உறுப்பினர்கள் சித்தரேவு ஊராட்சியில் இருந்து கொடைக்கானல் திமுக கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மூலமாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளரும் ஆத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் ஐ பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் வாழ்த்துக்களை தெராவித்தனர்1
- தெரிந்து கொள்வோம். குடம்பை என்னும் தானியங்கிடங்கு அந்த காலத்து முறைபடி எப்படி இருக்கும் என்று.1