Shuru
Apke Nagar Ki App…
அழகான கருத்து உள்ள பாடல்.
Senthilkumarankumaran
அழகான கருத்து உள்ள பாடல்.
- SelvanShenkottai, Tenkasi🙏4 hrs ago
- SelvanShenkottai, Tenkasi👏4 hrs ago
- Talaqajஉத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு🙏1 day ago
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது காலை 8:30 மணிக்கு மேல் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பொழிந்து வருகின்றது இந்த சாரல் மழை பொழிந்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுர்ச்சியான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது1
- 0திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.1
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.1
- தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் குத்தாட்டங்களுடன் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தனியார் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடன போட்டி கயிறு இழுக்கும் போட்டிகள் உள்ளிட்டவைகளுடன் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகள் வண்ண வண்ண உடை அணிந்து பொங்கல் வைத்து குத்தாட்டங்கள் ஆடியும் சிறப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடினர் தொடர்ந்து கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தும் வாழை கரும்பு உள்ளிட்டவைகளால் அலங்காரங்கள் செய்து பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கயிறு இழுக்கும் போட்டி உறியடிக்கும் போட்டி மியூசிக்கல் சேர் நாற்காலி போட்டி உள்ளிட்டவைகளை வைத்து மாணவ மாணவிகளை உற்சாகமடைய செய்தனர் தொடர்ந்து இசைக்கு ஏற்ப மாணவ மாணவிகள் குத்தாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்1
- Post by Firojali Sk1
- அரசு அதிகாரிகளை எச்சரித்த தர்மபுரி எம்எல்ஏ தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார் அப்போது எம்எல்ஏவிடம் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் புழுக்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். உடனே நகராட்சி ஆணையரைத் தொலைபேசியில் அழைத்த எம்எல்ஏ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தம் செய்யாவிட்டால் நானே இறங்கிச் சுத்தம் செய்வேன்" என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.1
- ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தமிழர் பாரம்பரிய முறைப்படி பட்டுபுடவை , வேஷ்டி,சட்டை அணிந்து வந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மாணவ மாணவிகள் சாரல் மழையில் நனைந்துகொண்டே சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டும் உறியடி போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றும் உற்சாகம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வருவதையடுத்து கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இதற்காக தமிழர் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் மாணவ மாணவிகள் பட்டுப்புடவை அணிந்தும் வந்திருந்து கல்லூரியின் மையப்பகுதியில் உள்ள தரைப்பகுதியில் வண்ணக்கோலங்கள் இட்டு , சுற்றிலும் கரும்புகள் வைத்து பொங்கல் பானை வைத்து பொங்கலோ பொங்கல் என குலவை இட்டு பொங்கல் வைத்தனர்.பின்னர் மத்தளம் ட்ரம் செட் இசை முழங்க, பொங்கல் பானைகளை தூக்கிகொண்டு கல்லூரி வளாகம் முழுவதும் ஆடிக்கொண்டே மாணவிகள் கொண்டு வர மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர்.மேலும் கல்லூரி வளாகத்தில் கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு மாணவ மாணவிகள் உரியடிக்கும் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் உற்சாகமாக கலந்துகொண்ட கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியாக சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.இதில் கல்லூரி ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு அவர்களும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியாக கொண்டாடினர்1
- திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியில் 15 அடி நீளமுள்ள அலகு குத்தி பக்தர் ஆட்டம்.1
- *மணப்பாறையில் திமுகவின் திராவிட பொங்கல் விழா.* *சமத்துவ பொங்கல் வைத்து மாநில அளவிலான கபாடி போட்டி துவக்கம்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதிய காலனியில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தெற்கு ஒன்றிய திமுகவின் சார்பில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி துவங்கியது. முன்னதாக விழா அரங்கம் முன்பாக புதுப்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற கபாடி போட்டியை திமுக திருச்சி தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் லீலாவேலு, முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி ஆகியோர் முதல் போட்டியில் களமிறங்கிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை துவக்கிவைத்தனர். போட்டியில் திருச்சி, திண்டுக்கல், சென்னை, கரூர், புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், தலா ரூ.20 ஆயிரம் மூன்றாம் நான்காம் பரிசாக வழங்கப்பட உள்ளது. போட்டியை திமுக வினர் மற்றும் கபாடி ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.1