மலேசிய முன்னாள் துணை முதல்வரை பட்டாடை அணிவித்து வரவேற்பு மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பேராசிரியர் இராமசாமி அவர்கள் தங்கள் இணையருடன், இன்று (14.09.2026) திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு பட்டாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மலேசிய நாட்டின் அரசியல், பொருளாதாரம் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் குறித்தும் பல்வேறு கோணங்களில் உரையாடல் நடைபெற்றது. அதன்பிறகு மதிய விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் மலேசிய உரிமைக் கட்சி துணைத் தலைவரும், மலேசியத் தமிழர் குரல் அறவாரியத் தலைவருமான திரு. டேவிட் மார்ஷல் அவர்களும், பினாங்கு மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய உரிமைக் கட்சிப் பொதுச் செயலாளருமான திரு. சதீஷ் முனியாண்டி அவர்களும், மலேசிய உரிமைக் கட்சிப் பொருளாளர் திரு. கிருஷ்ணசாமி அவர்களும், மலேசிய உரிமைக் கட்சியின் அரசியல் ஆலோசகரும் மலேசிய உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான முனைவர் திரு. சம்ஷேர் சிங் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மலேசிய முன்னாள் துணை முதல்வரை பட்டாடை அணிவித்து வரவேற்பு மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பேராசிரியர் இராமசாமி அவர்கள் தங்கள் இணையருடன், இன்று (14.09.2026) திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு பட்டாடை அணிவித்து
வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மலேசிய நாட்டின் அரசியல், பொருளாதாரம் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் குறித்தும் பல்வேறு கோணங்களில் உரையாடல் நடைபெற்றது. அதன்பிறகு மதிய விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் மலேசிய உரிமைக் கட்சி துணைத் தலைவரும், மலேசியத் தமிழர் குரல் அறவாரியத் தலைவருமான திரு. டேவிட் மார்ஷல் அவர்களும்,
பினாங்கு மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய உரிமைக் கட்சிப் பொதுச் செயலாளருமான திரு. சதீஷ் முனியாண்டி அவர்களும், மலேசிய உரிமைக் கட்சிப் பொருளாளர் திரு. கிருஷ்ணசாமி அவர்களும், மலேசிய உரிமைக் கட்சியின் அரசியல் ஆலோசகரும் மலேசிய உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான முனைவர் திரு. சம்ஷேர் சிங் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை1
- ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.2
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1
- மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் தினம் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா திமுகவினர் மாலை அணிவித்து இடுப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கைகாட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கருணை ராஜா கோட்டூர் முருகேசன், முசிறி நகரச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் தொட்டிய ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சப்தரிசி,மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிவ நடராஜன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட், கார்த்திக், நகராட்சி கவுன்சிலர்கள் விஸ்வநாதன் முகேஷ் தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் சண்முகராஜ், சிவசண்முகம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ...... இராசிபுரம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1