logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் பங்குனி திருவிழாக்கள் வெயிலின் தாக்கத்தால்... சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அனைத்து கட்சி சார்பாக வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியானது ( மாணிக்கம் ( அ.தி.மு.க.) வெங்கடேசன் ( திமுக.) கருப்பையா( த வெ.க) பாலமுருகன் ( சசிகலா அ.பு.தி.மு.க.) நாம் தமிழர் கட்சி சார்பாக நாகலெட்சுமி திருமாறன் இவர் மட்டுமே வேட்புமனு செய்துள்ளார் தற்போது பங்குனி திருவிழாக்கள் தொகுதி முழுவதும் கொண்டாடப்படுகிறது அனைத்து வேட்பாளர்களும் சிக்கன நடவடிக்கையும் வெயிலின் தாக்கம் வேறு ஆகவே மஞ்சமலையானைமட்டும் தரிசித்துவிட்டு அமைதி காக்கின்றனர் அனைத்து கட்சிகளளின் கடைக்கோடி தொண்டன் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறான் நாட்டின் கடன் சுமை பத்தரை லட்சம் கோடியாய் இருந்தால் நமக்கென்ன எனக்கு தேவையானது மட்டுமே என ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் பாமரன்

1 hr ago
user_தங்க சுரேஷ்
தங்க சுரேஷ்
பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
1 hr ago
6fcc5a0a-8d39-4fae-b99f-708bd549e565

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் பங்குனி திருவிழாக்கள் வெயிலின் தாக்கத்தால்... சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அனைத்து கட்சி சார்பாக வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியானது ( மாணிக்கம் ( அ.தி.மு.க.) வெங்கடேசன் ( திமுக.) கருப்பையா( த வெ.க) பாலமுருகன் ( சசிகலா அ.பு.தி.மு.க.) நாம் தமிழர் கட்சி சார்பாக நாகலெட்சுமி திருமாறன் இவர் மட்டுமே வேட்புமனு செய்துள்ளார் தற்போது பங்குனி திருவிழாக்கள் தொகுதி முழுவதும் கொண்டாடப்படுகிறது அனைத்து வேட்பாளர்களும் சிக்கன நடவடிக்கையும் வெயிலின் தாக்கம் வேறு ஆகவே மஞ்சமலையானைமட்டும் தரிசித்துவிட்டு அமைதி காக்கின்றனர் அனைத்து கட்சிகளளின் கடைக்கோடி தொண்டன் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறான் நாட்டின் கடன் சுமை பத்தரை லட்சம் கோடியாய் இருந்தால் நமக்கென்ன எனக்கு தேவையானது மட்டுமே என ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் பாமரன்

More news from Virudhunagar and nearby areas
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    17 hrs ago
  • தேனி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மூன்று சக்கர வாகன பேரணியினை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
    1
    தேனி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மூன்று சக்கர வாகன பேரணியினை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    52 min ago
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான். அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops, TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது. எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார். அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது,
சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான்.  அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். 
இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், 
எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops,  TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். 
எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. 
எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது.  எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார்.
அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை  ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்
    2
    சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை  நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    18 hrs ago
  • திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக  தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும்,  அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு  கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்   என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முக்கிய நிகழ்வுகள்: திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்: திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.
    1
    திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான அவர்கள் இன்று  நடைப்பயிற்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
முக்கிய நிகழ்வுகள்:
திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் மற்றும் திருச்சியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் அவர்கள் காந்திமார்கட் பகுதியில் தீவிரமாக வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாக்கக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன்:
திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு * திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  மாநகரக் கழகச் செயலாளர் 
மு.மதிவாணன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு காந்தி மார்க்கெட் பகுதியில்  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கூடினர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார். மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர்.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார்.
மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    17 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, தற்போது அண்ணா திமுக என்பது கிடையாது. அண்ணா தொடங்கிய திமுக மட்டும் தான் உள்ளது. அதற்கு நானும் சாட்சி என்றார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழித்து, அமிர்ஷா என்ற சேட்டுக்கடையில் அடகு வைத்து விட்டார். அவரை முதலமைச்சர் பட்டியலில் சேர்க்க கூடாது என்றவர், அவர் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அல்ல தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட வரும் அல்ல கூவத்தூரில் டெண்டரால் தலைவர் ஆனார் என்றார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுக்கு அன்பு சரணாலயமாக திமுக அறிவாலயம் விளங்குகிறது என்ற மருது அழகுராஜ், அண்ணா திமுக, அமிர்ஷா திமுகவாக மாறிவிட்டதால் இன்னும் பலர் அதிமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்றார். மேலும், தற்போது நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தல், ஆரியர்களுக்கும், திராவிடருக்கும் நடக்கும் யுத்தம். IPL மேட்ச் போல டெல்லி டேர்டெவில் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நடைபெறும் போட்டி. இதில் தமிழர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் வாக்களிப்பார்கள் என மருது அழகுராஜ் தெரிவித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது,
தற்போது அண்ணா திமுக என்பது கிடையாது. அண்ணா தொடங்கிய திமுக மட்டும் தான் உள்ளது. அதற்கு நானும் சாட்சி என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழித்து,  அமிர்ஷா என்ற சேட்டுக்கடையில் அடகு வைத்து விட்டார். அவரை முதலமைச்சர் பட்டியலில் சேர்க்க கூடாது என்றவர், அவர் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அல்ல தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட வரும் அல்ல கூவத்தூரில் டெண்டரால் தலைவர் ஆனார் என்றார்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுக்கு  அன்பு சரணாலயமாக திமுக அறிவாலயம் விளங்குகிறது என்ற மருது அழகுராஜ், 
அண்ணா திமுக, அமிர்ஷா திமுகவாக மாறிவிட்டதால் இன்னும் பலர் அதிமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்றார். மேலும், தற்போது நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தல், ஆரியர்களுக்கும், திராவிடருக்கும் நடக்கும் யுத்தம். IPL மேட்ச் போல டெல்லி டேர்டெவில் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நடைபெறும் போட்டி. இதில் தமிழர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் வாக்களிப்பார்கள் என மருது அழகுராஜ் தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை  சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது  மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.