2026 தேர்தல்: “தமிழ்நாடு vs டெல்லி” – ஜனநாயகப் போர் : தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார். மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.1
- மதுரை கிழக்கு தொகுதியின் தவெக கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் இன்று ( மார்ச் .30) விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர் பேசும் போது 30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.1
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார். மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1