பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் (பேருந்து நிலையம்) பேரூராட்சி அலுவலகம் முன்பு ரயில்வே பீடர்ஸ் ரோட்டில் வடிகால் வசதியுடன கூடிய சிறுபாலம் கட்டுப்பணிக்காக சாலை தோண்டப்பட்டு வாரக்கணக்கில் பணிகள் நடைபெற்று வருவதால் நீதிமன்றம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ,தனியார் பள்ளிகள் மேலும் ஆசிரியர் கல்லூரி, வேளாண் அலுவலகம், மறவபட்டி ,அனுப்பபட்டி, ஏத்தக் கோயில் போன்ற ஊர்களுக்கு பிச்சம்பட்டி வழியாக வாகனங்கள் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரமும் தூரமும் அதிகரித்து சேர வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படிப்பட்ட இடங்களில் நடைபெறும் பணியினை காலம் தாழ்த்தாமல் ஆட்கள் கூடினால் நாட்கள் குறையும் என்ற அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒரு வேளை தேர்தல் அறிவிக்கும் பட்சத்தில் வேலை கிடப்பில் போடக்கூடிய நிலை ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

- திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் இன்று காரும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ இல்லை. ஆனாலும் இந்த விபத்தில் காரணமாக போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- Post by அன்பரசு1
- உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி சேர்ந்த அஜித் என்பவரை முன் விரோதம் காரணமாக சந்தோஷ் மற்றும் பசும்பொன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர் இந்த கொலை சம்பந்தமாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் படி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி சந்தோஷ் மற்றும் பசும்பொன் இருவர் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தின் கைது செய்தனர்1
- ஒட்டன்சத்திரம் மற்றும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள மாணவர்கள், மாணவியர்கள் ஒட்டன்சத்திரம் நகரில் வந்து கல்வி கற்று சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறனர். இந்நிலையில் பள்ளி விடும் நேரத்தில் அரசு சார்பில் ஊதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்து தாருங்கள் பேருந்து தங்களுடைய ஊருக்கு செல்ல வேண்டியதாக மாணவியர்கள் குற்றம் சாட்டி வருகிறனர். மேலும் பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பள்ளி மாணவியர்கள் கோரிக்கை.1
- பானி பூரி விற்பனையாளர் ஒருவர் தண்ணீரில் இருந்து உயிருள்ள எலியை அகற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி, 25 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. சாலையோரக் கடையில் ஒரு இளைஞர் சவால் வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் பெரும் சுகாதாரக் கவலைகளைத் தூண்டியுள்ளது1