logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும், ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியை, இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் கிரிக்கெட் பார்த்த இந்த செயல், நோயாளிகளிடையேயும், அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியாளர்கள் கிரிக்கெட் பார்க்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.

7 hrs ago
user_Murali
Murali
Salem, Tamil Nadu•
7 hrs ago

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும், ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியை, இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் கிரிக்கெட் பார்த்த இந்த செயல், நோயாளிகளிடையேயும், அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியாளர்கள் கிரிக்கெட் பார்க்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.

More news from Tamil Nadu and nearby areas
  • சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் – புவனேஸ்வரி தம்பதியினரின் மகள் கோபிகா, நீட் தேர்வு பயத்தால் கடந்த மாதம் உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கோபிகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், அனிதா உயிரிழந்த சம்பவத்தில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 37 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வேதனையோடு தெரிவித்தார். இந்த உயிரிழப்புகள் குறித்து நாடு முழுவதும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வு முறை முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மோடி அரசும் அமித் ஷாவும் தான் இதற்கு காரணம் என்றும், இதற்குப் பின்னால் கோச்சிங் சென்டர் மாபியாவின் ஆதிக்கம் இருப்பதாகவும் அவர் சாடினார். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை கோச்சிங் மையங்கள் மூலம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் 2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றால், நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கிடையே, செய்தியாளர்கள் மேகதாது அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மாணிக்கம் தாகூர், அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிரிஸ்டோபர் திலக், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரத்தினவேல் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் – புவனேஸ்வரி தம்பதியினரின் மகள் கோபிகா, நீட் தேர்வு பயத்தால் கடந்த மாதம் உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கோபிகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், அனிதா உயிரிழந்த சம்பவத்தில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 37 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வேதனையோடு தெரிவித்தார். இந்த உயிரிழப்புகள் குறித்து நாடு முழுவதும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வு முறை முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மோடி அரசும் அமித் ஷாவும் தான் இதற்கு காரணம் என்றும், இதற்குப் பின்னால் கோச்சிங் சென்டர் மாபியாவின் ஆதிக்கம் இருப்பதாகவும் அவர் சாடினார். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை கோச்சிங் மையங்கள் மூலம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வரும் 2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றால், நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கிடையே, செய்தியாளர்கள் மேகதாது அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மாணிக்கம் தாகூர், அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிரிஸ்டோபர் திலக், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரத்தினவேல் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    27 min ago
  • சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார். இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    1
    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார்.

இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    16 min ago
  • ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பவானி நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பவானி நகரின் பிரதான சாலைகள் வழியாக பவானி பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    1
    ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பவானி நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பவானி நகரின் பிரதான சாலைகள் வழியாக பவானி பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    user_Reporter Meganathan
    Reporter Meganathan
    Local News Reporter பவானி, ஈரோடு, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    21 min ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    user_க. சுந்தரேசன்
    க. சுந்தரேசன்
    தொட்டியம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
    1
    கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும், ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியை, இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் கிரிக்கெட் பார்த்த இந்த செயல், நோயாளிகளிடையேயும், அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியாளர்கள் கிரிக்கெட் பார்க்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும், ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியை, இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் கிரிக்கெட் பார்த்த இந்த செயல், நோயாளிகளிடையேயும், அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியாளர்கள் கிரிக்கெட் பார்க்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    7 hrs ago
  • தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாமலை துவக்கியுள்ள "We The Leaders" அமைப்பின் சார்பில், போதை இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. டெல்லி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கரு நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அங்குள்ள பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்மணி, வேலுமணி, சிவகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சாய்சத்யன், ராஜா, கிருஷ்ணாசாய், சிமோன் கிறிஸ்டி, கார்த்திக், பிரபு, கடத்தூர் குமார், சுக்ரி, சத்திவேல், மணி கல்பனா, வடபழனி ராஜா, சிவன், ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    1
    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாமலை துவக்கியுள்ள "We The Leaders" அமைப்பின் சார்பில், போதை இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. டெல்லி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கரு நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அங்குள்ள பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்மணி, வேலுமணி, சிவகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சாய்சத்யன், ராஜா, கிருஷ்ணாசாய், சிமோன் கிறிஸ்டி, கார்த்திக், பிரபு, கடத்தூர் குமார், சுக்ரி, சத்திவேல், மணி கல்பனா, வடபழனி ராஜா, சிவன், ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    41 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.