தேசம் காக்கும் போராட்டம் புதுக்கோட்டையில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் தேசம் காக்கும் போராட்டம் புதுக்கோட்டையில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை, ஆக.26- தேசம் காக்கும் போராட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். நிலம், குடிமனைப் பட்டா கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை கொண்டு வர வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எதிர்த்து, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, கல்வி வணிகமயத்தையும் நீட் தேர்வு முறையையும் எதிர்த்து, சாதிய ஒடுக்குமுறை, ஆணவப்படுகொலை, வெறுப்பு அரசியலை எதிர்த்து, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, விவசாயிகள் ஐக்கிய முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.செல்வராசு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் அமைப்பு நிர்வாகி ரேவதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் உ.அரசப்பன், ஏஐசிசிடியு நிர்வாகிகள் சிவராஜ், வளத்தான், விவசாயிகள் ஐக்கிய முன்னணி நிர்வாகி கே.சுந்தர்ராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், சிஐடியு நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, எம்.ஏ.ரகுமான், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன், செயலாளர் எம்.மகாதீர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.நல்லதம்பி உள்ளிட்டோர் பேசினர்.
தேசம் காக்கும் போராட்டம் புதுக்கோட்டையில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் தேசம் காக்கும் போராட்டம் புதுக்கோட்டையில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை, ஆக.26- தேசம் காக்கும் போராட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். நிலம், குடிமனைப் பட்டா கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை கொண்டு வர வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எதிர்த்து, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, கல்வி வணிகமயத்தையும் நீட் தேர்வு முறையையும் எதிர்த்து, சாதிய ஒடுக்குமுறை, ஆணவப்படுகொலை, வெறுப்பு அரசியலை எதிர்த்து, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, விவசாயிகள் ஐக்கிய முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.செல்வராசு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் அமைப்பு நிர்வாகி ரேவதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் உ.அரசப்பன், ஏஐசிசிடியு நிர்வாகிகள் சிவராஜ், வளத்தான், விவசாயிகள் ஐக்கிய முன்னணி நிர்வாகி கே.சுந்தர்ராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன், சிஐடியு நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, எம்.ஏ.ரகுமான், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன், செயலாளர் எம்.மகாதீர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.நல்லதம்பி உள்ளிட்டோர் பேசினர்.
- हेडलाइन: गंगा बैराज हाईवे पर मिला अज्ञात व्यक्ति का शव, नवाबगंज पुलिस जांच में जुटी कानपुर नगर के नवाबगंज थाना क्षेत्र स्थित गंगा बैराज हाईवे पर मंगलवार सुबह एक अज्ञात व्यक्ति का शव मिलने से इलाके में हड़कंप मच गया हाईवे से गुजर रहे राहगीरों ने सड़क किनारे शव पड़ा देखा और पुलिस को सूचना दी सूचना मिलते ही नवाबगंज थाना पुलिस टीम मौके पर पहुंची पुलिस ने घटनास्थल को सुरक्षित कर आसपास के लोगों से पूछताछ की मौके पर कई पुलिसकर्मी मौजूद रहे और मामले की छानबीन करते नजर आए पुलिस के अनुसार, मृतक की उम्र लगभग 35-40 वर्ष के आसपास लग रही है और उसकी अभी तक शिनाख्त नहीं हो सकी है शव को कब्जे में लेकर पंचनामा भर पोस्टमार्टम के लिए भेज दिया गया है थाना प्रभारी ने बताया कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मौत के सही कारणों का पता चल सकेगा फिलहाल आसपास के थानों में गुमशुदा लोगों के बारे में जानकारी जुटाई जा रही है और शव की पहचान कराने का प्रयास किया जा रहा है पुलिस मामले की हर एंगल से जांच कर रही है3
- கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.1
- *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.1
- காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.1
- தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர் மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.1
- தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத உற்சவ திருவிழா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊரணி ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோயிலில் 61 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ பெருவிழா நடைபெற்று வருகிறது. 6ம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை நேற்று இரவு பூச் சொரிதல் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அம்மையப்பரின் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் ராகவா வாசுதேவன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அம்மையப்பர் அறக்கட்டளையின் செயலாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் நேசமணி, விமல், மணி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவிலில் சர் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் நோக்கத்திலும் மற்றும் துரித உணவுகளை தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்த பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் குழந்தைகள் உணவு பொருட்களின் வேடமிட்டு பாப்பா கோவிலில் பேரணியாக சென்றனர்.1
- குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1