Shuru
Apke Nagar Ki App…
ஆதி லட்சுமிபுரம் அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன் பரபரப்பான சூழல் நிலவியது.
RAJA
ஆதி லட்சுமிபுரம் அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன் பரபரப்பான சூழல் நிலவியது.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by RAJA news1
- மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2
- Post by G.thangarasu1
- சிறுமியின் பேச்சு சிறப்பு #tamil #publicresponse #publicintrest #DMK #TVK #ADMK #publicspeaking1
- Post by Ajithkumar S1
- குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.3
- welcome Tamil Nadu Sivaganga District THAMARAKKI NAADU1
- விதைகள் அறக்கட்டளை சார்பில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி விதைகள் அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அலுவகத்தில் கரூர் மாவட்ட சிறு குறு விவசாயிகள் மத்தியில் மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் சந்துரு தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை இயக்குனர் ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் புனிதாம்பிகா, இனுங்கூர் விதை சுத்திகரிப்பு நிலையம் வேளாண்மை அலுவலர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம், விதையின் வகைகள் அதன் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து தோகைமலை டிஎஸ்பிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன் கலந்து கொண்டு சவுக்கு மற்றும் தைலம் சாகுபடி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். அறக்கட்டளை நிறுவனர் அழகிரிசாமி கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை வைப்பது பாதுகாப்பது பற்றி விளக்கி கூறினார், அறக்கட்டளை நிறுவனர் சண்முகம் கலந்து கொண்டு தானியங்கள் முக்கியத்துவம், மதிப்பீட்டு முறை மற்றும் மலைப்பயிர்கள் வகைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இறுதியில் விதைகள் அறக்கட்டளை நிர்வாகி ஜெகதீஸ்வரன் நன்றி உரை ஆற்றினார். இதில் விவசாயிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.1