Shuru
Apke Nagar Ki App…
திருப்பரங்குன்றத்தில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இத்திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று (மார்ச்..30) இரவு வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப் பெருமான் தெய்வானை சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முருகப்பெருமான் வீதியுலாவின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சு.இரத்தினவேல்
திருப்பரங்குன்றத்தில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இத்திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று (மார்ச்..30) இரவு வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப் பெருமான் தெய்வானை சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முருகப்பெருமான் வீதியுலாவின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.1
- மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு திடீரென வன்முறையாக மாறி, அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .1
- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 30.03.2026 திங்கட்கிழமை சந்திர சோமவார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1