Shuru
Apke Nagar Ki App…
மேட்டுப்பாளையம். சிறுமுகை லிங்காபுரம் காந்தவயல் இடையே நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக காந்தையாற்றில் வெள்ளபெருக்கு.
Senthilkumarankumaran
மேட்டுப்பாளையம். சிறுமுகை லிங்காபுரம் காந்தவயல் இடையே நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக காந்தையாற்றில் வெள்ளபெருக்கு.
- MaymunaPalayamkottai, Tirunelveli🙏30 min ago
More news from Tamil Nadu and nearby areas
- ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பனவீக்கம் காரணமாக அங்கு மக்கள் போராட்டம்.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் இரவு முதல் விடியவிடிய பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் உள்ளூர் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு வரும் சூழல் உள்ளதால் தடுப்பணை பகுதிக்கு செல்ல காவல்துறை தடை. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது அணை பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சி. போடிநாயக்கனூரில் உள்ள முக்கிய நீர்ப்பாசன கண்மாயிகள் குளங்களான பங்காரு சாமி குளம், செட்டிகுளம், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்வாய் போன்றவைகளின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக விளங்கும் இந்த தடுப்பணை நீர்வீழ்ச்சியின் உபரி நீர் கொட்டக்குடி ஆறு வழியாக வைகை அணைசெல்கிறது . தற்போது போடிநாயக்கனூரை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, பிச்சாங்கரை, ஊத்தாம்பாறை, போடி மெட்டு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போடிநாயக்கனூர் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கொட்டகுடி ஆறு கொம்பு தூக்கி ஆறு புலியூத்து அருவி பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் போடிநாயக்கனூரை சுற்றியுள்ள கண்மாய் கள் குளங்களின் முக்கிய நீர் வரத்து பகுதியான அணைப் பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சி பகுதியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தடுப்பணைகளைத் தாண்டி காட்டாற்று வெள்ளம் சீறி ப்பாய்ந்து செல்கிறது. இன்று அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காரணமாக சாரல் மழையிலும் தடுப்பணை பகுதிகளுக்கு ரீல்ஸ் எடுக்கவும் செல்பி எடுக்கவும் வருகைதரும் நிலையில் தடுப்பணைகளை தாண்டி சிறுசிறு மரக்கட்டைகள் கற்களுடன் மற்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள்வெள்ள நீரில் இழுத்துவரப்படும் அபாயம் உள்ளதால் தடுப்பணை பகுதிக்குள் யாருக்கு இறங்கக்கூடாது என்று எச்சரிக்கை. விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.1
- வேடசந்தூர்: மாரம்பாடி புனித பெரிய அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோனியார் ஆலயம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்தின் பங்கு தந்தை சுரேஷ்சகாயராஜ், துணைப் பங்கு தந்தை அமல்ராஜ் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் மாரம்பாடி ஊர் மேனேஜர் மற்றும் நாட்டாமை, மணியக்காரர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் *பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சியில் இன்று ஜனவரி 1 புத்தாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாண்டு வரவேற்கும் பட்சத்தில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மற்றும் வண்ண வான வெடிகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன அனைத்து இல்லங்களிலும் வண்ணக் கோலங்கள் இட்டு மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்1
- வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று இருந்த நிலையில், நேற்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 10.5 பவுன் தங்க நகை 4 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்1
- மேட்டுப்பாளையம். சிறுமுகை லிங்காபுரம் காந்தவயல் இடையே நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக காந்தையாற்றில் வெள்ளபெருக்கு.1