logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சட்டமன்றத் தேர்தல்: மதுரை மாவட்டம் பத்து தொகுதிகளில் என்ன நிலைமை...? மதுரை.. ​மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும் எந்த கட்சி தோல்வியடையும் என்பதுதான் மார்ச் 20 ஆம் தேதி பகல் 12 மணி வரையிலான பேசுபொருள். தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரம் தொடங்கியது முதல் பிப்ரவரி 20ஆம் தேதி காலை 11:30 மணி வரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று வந்தேன். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர் சுற்றுப்பயணத்தின் போது குறைந்தது மூன்று மணி நேரம் செலவிட்டேன். வாக்காளர்களிடமும் பேசினேன். ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் பேசினேன். ​மேலூர், உசிலம்பட்டி தொகுதிகளில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மதுரை கிழக்கு, மதுரை மையம், சோழவந்தான் தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மற்ற தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நகர்ப்புறங்களில் தமிழக வெற்றிக் கழகம் ஆறு முதல் ஒன்பது சதவீத வாக்குகளைப் பெறும். கிராமப்புறங்களில் நான்கு முதல் ஐந்து சதவீத வாக்குகளைப் பெறும். முழுமையாக பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் ஐந்து முதல் ஏழு சதவீத வாக்குகளைப் பெறும். முற்றிலும் கிராமம் சார்ந்த பகுதிகளில் இரண்டு முதல் மூன்று சதவீத வாக்குகளைப் பெறும். ​மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியின் தீவிரம் கடுமையாக உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் நாகமலை புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதிகள், அவனியாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விரிவாக்க பகுதிகள், திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்வி பட்டி பகுதிகளில் திமுகவினர் மற்றும் தோழமைக் கட்சியினர் அவர்களது கட்சியினரின் வாக்குகளை வாக்குச்சாவடி மையத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால் திருப்பரங்குன்றம் திமுகவிற்கு சாதகமாக அமையும். ​திருமங்கலம் தொகுதியில் தென்னந்தோப்பு வேட்பாளர் ஜீவிதா நாச்சியார் கவனிக்கக்கூடிய வேட்பாளர்களில் முக்கியமானவர். தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, தென்னந்தோப்பு (சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சி) பெறும் வாக்குகள் மணிமாறனின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைய வாய்ப்புள்ளது. ​மதுரை மேற்கு தொகுதியைப் பொருத்தமட்டில் விரிவாக்க பகுதிகளில் திமுக வலுவாகவே உள்ளது. நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளது. இங்கு தமிழக வெற்றிக் கழகம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவினாலும் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை பிரதான அரசியல் கட்சிகளில் யார் வெற்றி பெறுவார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ​ஏப்ரல் 21 ஆம் தேதி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் பாலாஜியுடன் பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. தொகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் ஒரு வாக்காளர் டீக்கடையில் அமர்ந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களில் ஒருவருக்கு கைபேசியில் அழைப்பு வர, அவரோ யார் கொடுத்தாலும் பரவாயில்லை, நாம் விசிலுக்கு வாக்களிப்போம் எனக் கூறியதுதான் விசித்திரமாக இருந்தது. ​இலவச அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகளைப் பொருத்தமட்டில் திமுக அணிக்கே வரவேற்பு உள்ளது. அதிமுக அணியின் தேர்தல் பிரச்சாரம், எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கள் ஆகியவை குறித்து மிக சிலருடன் மட்டுமே உரையாட முடிந்தது. மிகச் சிலர் என துல்லியமாக குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு காரணம் வாய்ப்பு கிடைக்கும்போது உரையாடியதுதான். ​நெகட்டிவ் + நெகட்டிவ் = பாசிட்டிவ். பாசிட்டிவ் + பாசிட்டிவ் = பாசிட்டிவ். அதாவது எடப்பாடியின் பிரச்சாரம், அதிமுகவின் பிரச்சாரம் திமுகவிற்கு எதிராகவே இருந்தாலும் அது வாக்காளர்களிடையே அதிருப்தியையும் சலிப்பையும் ஏற்படுத்தி உள்ளதையே காட்டுகிறது. ஒட்டு மொத்தத்தில் அதிமுக அணி இரண்டு தொகுதியிலும், திமுக மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையே உள்ளது. ஐந்து தொகுதிகளில் இழுபறி தொடர்கிறது.

1 hr ago
user_N-KIPSRA
N-KIPSRA
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
1 hr ago
bd774340-5a62-4a30-ac65-25f6e2669206

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல்  சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று  இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    21 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது. அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது.
அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார்.
அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    2 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இத்திருக் கோயிலில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    1
    மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இத்திருக் கோயிலில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
இன்று தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு 
ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன்  தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு  
ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை. இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும். அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார். நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள். அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    1
    *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை.
இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும்.
அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் 
என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார்.
நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை 
மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள்.
அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    1
    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    42 min ago
  • தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    1
    தேவகோட்டை 
யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய  நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்,
: முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி,
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின்  தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர்,
தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக  தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.