ஆத்தூர் திமுகவில் பரபரப்பு: வெளியூர் வேட்பாளருக்கு வாய்ப்பு படுதோல்வி! சேலம்: ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், கடந்த 2021,2016,2011, ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் வெளியூர் வேட்பாளராக களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் அர்த்தனாரி இரண்டு முறை தோல்வியடைந்தார். தொடர்ந்து 2021 இல் கெங்கவல்லி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை திமுக சார்பில் போட்டியிட்டு, இத்தொகுதியில் சொற்பமான சுமார் 7,058 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர் இடம் தோல்வியை தழுவினர். இத்தொகுதியில் இம்முறை வெளியூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தாள், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உழைக்க தயாராக இல்லை எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக கோட்டையான இத்தொகுதியை கைப்பற்ற, உள்ளூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க பொதுமக்களும், விவசாயிகளும், கட்சி நிர்வாகிகளும் தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலைமையின் பிடியில் ஆத்தூர் தொகுதி???
ஆத்தூர் திமுகவில் பரபரப்பு: வெளியூர் வேட்பாளருக்கு வாய்ப்பு படுதோல்வி! சேலம்: ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், கடந்த 2021,2016,2011, ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் வெளியூர் வேட்பாளராக களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் அர்த்தனாரி இரண்டு முறை தோல்வியடைந்தார். தொடர்ந்து 2021 இல் கெங்கவல்லி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை திமுக சார்பில் போட்டியிட்டு, இத்தொகுதியில் சொற்பமான சுமார் 7,058 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர் இடம் தோல்வியை தழுவினர். இத்தொகுதியில் இம்முறை வெளியூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தாள், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உழைக்க தயாராக இல்லை எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக கோட்டையான இத்தொகுதியை கைப்பற்ற, உள்ளூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க பொதுமக்களும், விவசாயிகளும், கட்சி நிர்வாகிகளும் தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலைமையின் பிடியில் ஆத்தூர் தொகுதி???
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரிமா சங்க திருமண மண்டபத்தில் இன்று 167 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கினர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை நேற்று மார்ச் 10 ஆம் தேதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து மலைப் பாதை வழியாக அமைச்சர் மதிவேந்தன், ஈஸ்வரன் எம் எல் ஏ, ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாலசுப்பரமணியன் சுவாமி தரிசனத்தை காண்பதற்கு பசு கன்றுடன் மேளதாளத்துடன் யாத்திரை செய்தனர்1
- Post by Lingaraju mc6
- கோடை காலம் தொடங்கியதால் ஓசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாகவும் ஒற்றை யானையாகவும் ஒகேனக்கல் - பென்னாகரம் வனப்பகுதியில் உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் வனப் பகுதிகளில் முகமிட்டுள்ளன. ஒகேனக்கல் பென்னாகரம் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் ஒகேனக்கல் சின்னாறு பகுதிகளில் தண்ணீர் குடிப்பதற்காக தினந்தோறும் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள பென்னாகரம் ஒகேனக்கல் செல்லக்கூடிய பிரதான சாலையை கடந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்கின்றன. அவ்வாறு சாலையை கடக்கும் யானைகளை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பியும் வாகனங்களில் அதிகம் சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்வதுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து யானையை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன இதனை தடுக்கும் விதமாக ஒகேனக்கல் வனத்துறை சார்பில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முத்தரவின் பெயரில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் சிவகுமார் அறிவுறுத்தலின்படியும் தினம் தோறும் பென்னாகரம் - ஒகேனக்கல் மனசாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருக்கினர்க்னர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒகேனக்கல் வனவர்கள் மகேஸ்வரி,சுவாதி ஆகியோர் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் முண்டச் பள்ளம் பகுதியில் யானை தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்துள்ளது இவனை கண்டால் ரவுண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் யானை சாலையை கடந்து செல்லும் வரை இரு புறமும் சாலைகளில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி யானை சாலையை கடக்கும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் யானை சாலையை கடந்த பின்பு சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்ட வாகனங்களை விரைவாக அப்புறப்படுத்தினர். சாலையை கடந்த யானையை வீடியோ எடுத்தும் அதிக சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்த இரண்டு வாகன ஓட்டிகளை எச்சரித்து அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வனக்காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி ,காளிமுத்து, சுஜாதா,மற்றும் வன காவலர்கள் மோகன,அனிதா ஆகியோர் ரோந்து பாதுகாப்பு பணியில் உடன் இருந்தனர்1
- அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர் தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது1
- தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.1
- எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் ஆங்காங்கே நடத்தப்படும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் நடத்த வேண்டும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை... அனைவரது கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றலாம் என ஒத்துழைப்பு வழங்கிய நகர மன்ற தலைவர்... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் , திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்... இந்த நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி முழுவதும் உள்ள பகுதிகளில் மின்விளக்கு பராமரிப்பு, தார் சாலை, சாக்கடை வசதி முறையாக செய்யப்படவில்லை எனக் கூறி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது... மேலும் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றி ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்து அங்கு இறைச்சி கடைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்... அதனை தொடர்ந்து 82 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது...1
- நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்1