Shuru
Apke Nagar Ki App…
மேகதாது விவகாரம்: முதலமைச்சரின் தனி ஆவர்த்தனத்தால் தமிழ்நாடு தனிமைப்பட்டு நிற்கிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்! தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம். நீர் திறக்க சொன்னதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டது கர்நாடகா - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
Lakshmanan
மேகதாது விவகாரம்: முதலமைச்சரின் தனி ஆவர்த்தனத்தால் தமிழ்நாடு தனிமைப்பட்டு நிற்கிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்! தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம். நீர் திறக்க சொன்னதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டது கர்நாடகா - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
More news from தமிழ்நாடு and nearby areas
- வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது இதனை அடுத்து நேற்று பெய்த மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தல் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை புதுகை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 46 மி.மீ,குடுமியான்மலை 30 மி.மீ, திருமயம் 25.2 மி.மீ அன்னவாசல் 16 மி.மீ , காரையூர் 10.4 மி.மீ, கந்தர்வகோட்டை 7.5 மி.மீ, கீரனூர் 6.4 மி.மீ,அரிமளம் 6 மி.மீ, உடையாளிபட்டி 5.8மி.மீ, பொன்னமராவதி 4.2 மி.மீ, ஆலங்குடி 3 மி.மீ,கரம்பக்குடி 1.2மி.மீ என மொத்தம் 161.7மி.மீ பதிவாகியுள்ளது.1
- வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்1
- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்1
- இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.1