logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை கலெக்டர் தகவல்! புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 30 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம்முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

2 days ago
user_நம்ம ஊரு புதுக்கோட்டை
நம்ம ஊரு புதுக்கோட்டை
Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
2 days ago
9270552d-9548-4fec-82a9-bc9cd72b9298

புதுக்கோட்டை கலெக்டர் தகவல்! புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 30 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம்முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

More news from Tamil Nadu and nearby areas
  • ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு பூஜை! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் தொடங்கியுள்ள நிலையில் அந்த காளைக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான காளை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.
    1
    ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு பூஜை!
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் தொடங்கியுள்ள நிலையில் அந்த காளைக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான காளை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    5 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 
தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்
    2
    கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Reporter Kulithalai, Karur•
    5 hrs ago
  • திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    3
    திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது
திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 
வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை  நடைபெற்றது  இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.
தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம்,  முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள்.
பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது
    1
    தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.
    7
    ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist Attur, Salem•
    19 hrs ago
  • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் நெம்மகோட்டை நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை வழங்கினார்.
    1
    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்
நெம்மகோட்டை நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை வழங்கினார்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.