காரைக்குடி தொகுதி தேவகோட்டையில் பரபரப்பு: TVK வேட்பாளர் சாலை மறியல் - தபால் வாக்கு குளறுபடி எனப் புகார்! சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தபால் வாக்குப்பதிவின் போது அதிகாரிகளின் செயல்பாட்டில் குளறுபடி நடந்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டாக்டர் டி.கே. பிரபு தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தோழர் ஜீவானந்தம் தெரு பகுதியில் வசிக்கும் 90 வயது முதியவர் ராஜாமணி.மனைவி சீதை அம்மாள் இருவரிடம் தபால் வாக்கு பெறச் சென்ற தேர்தல் அதிகாரிகள், உறவினர்களை வெளியேற்றிவிட்டு, அவர் விருப்பத்திற்கு மாறாக மாற்றுச் சின்னத்தில் வாக்களித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து ராஜாமணியின் குடும்பத்தினர் காவல் துறை மற்றும் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும் , இது தொடர்பாக சார் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க முயன்றபோது, அவர் நேரில் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து வேட்பாளர் பிரபு தலைமையில் தொண்டர்கள் காரைக்குடி - தேவகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின் போக்குவரத்து சீரானது.

- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.1
- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி, கோடாங்கி பட்டி, புது கோடாங்கி பட்டி, சீவல் சரகு , அக்கரைப்பட்டி, வேல கவுண்டன்பட்டி, இராமநாதபுரம், மல்லையாபுரம், பாறைப்பட்டி, வீரக்கல், கூத்தாம்பட்டி , ஆத்தூர் போன்ற பகுதிகளில் தமிழக வெற்றி க்கழக ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நா. கலைச்செல்வி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தங்கள் கட்சிகளின் பத்து அம்ச மகளிர்க்கான தேர்தல் வாக்குறுதிகள்: 1 -பெண்கள் குழந்தைகளுக்கு தனி இலாகா உருவாக்கப்படும், 2 -அன்னபூரணி சூப்பர் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும், 3 -மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும் ,4 -மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5லட்சம் கடன் மானியத்துடன் வழங்கப்படும், 5 -தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும், 6 -60 வயது வரையிலான அனைத்து மகளிர்க்கும் உதவித்தொகை மாதம் ரூபாய் 2500 வழங்கப்படும், 7 தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும், 8 -அண்ணன் சிர் திட்டத்தின் படி திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் ,பட்டு சேலை வழங்கப்படும், 9 -இலவச சானிட்டரி ஃபேட்ஸ் பொது விநியோகம் இடமான ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும், 10 -பொது போக்குவரத்தில் ஸ்மார்ட் அவசர பொத்தான்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட பத்து அம்ச வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வேட்பாளருக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்து ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம் ,லக்ஷ்மணன் , அருண்குமார், மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக மகளிர் அணி நிர்வாகிகள், மாணவ இளைஞர் அணி நிர்வாகிகள், மற்றும் தவெக பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அஇஅதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் A. விஸ்வநாதன் நகர செயலாளர் K.முகமது ஹாஜியார் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தபால் வாக்குப்பதிவின் போது அதிகாரிகளின் செயல்பாட்டில் குளறுபடி நடந்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டாக்டர் டி.கே. பிரபு தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தோழர் ஜீவானந்தம் தெரு பகுதியில் வசிக்கும் 90 வயது முதியவர் ராஜாமணி.மனைவி சீதை அம்மாள் இருவரிடம் தபால் வாக்கு பெறச் சென்ற தேர்தல் அதிகாரிகள், உறவினர்களை வெளியேற்றிவிட்டு, அவர் விருப்பத்திற்கு மாறாக மாற்றுச் சின்னத்தில் வாக்களித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து ராஜாமணியின் குடும்பத்தினர் காவல் துறை மற்றும் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும் , இது தொடர்பாக சார் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க முயன்றபோது, அவர் நேரில் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து வேட்பாளர் பிரபு தலைமையில் தொண்டர்கள் காரைக்குடி - தேவகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின் போக்குவரத்து சீரானது.1