வசந்திராயன்பாளையத்தில் செயல்பட்டுவரும் குப்பை கிடங்கை அகற்ற கோரியும்நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலுார்: வசந்திராயன்பாளையத்தில் செயல்பட்டுவரும் குப்பை கிடங்கை அகற்ற கோரியும், காஸ் உற்பத்தி மையத்தை திறந்து வைக்க அமைச்சர் வராததைக் கண்டித்தும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலுார் முதுநகர் வசந்திரான்பாளையத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இப்பகுதியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து அதை உரமாகவும், குப்பையில் இருந்து காஸ் தயாரிக்கும் மையமும் நிறுவப் பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் மாநகராட்சியில் இருந்து சேகரிக்கும் குப்பைகள் ஒரே இடத்தில் குவித்து வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து குப்பை கிடங்கை அகற்ற கோரி வருகின்றனர்.
வசந்திராயன்பாளையத்தில் செயல்பட்டுவரும் குப்பை கிடங்கை அகற்ற கோரியும்நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலுார்: வசந்திராயன்பாளையத்தில் செயல்பட்டுவரும் குப்பை கிடங்கை அகற்ற கோரியும், காஸ் உற்பத்தி மையத்தை திறந்து வைக்க அமைச்சர் வராததைக் கண்டித்தும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலுார் முதுநகர் வசந்திரான்பாளையத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இப்பகுதியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து அதை உரமாகவும், குப்பையில் இருந்து காஸ் தயாரிக்கும் மையமும் நிறுவப் பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் மாநகராட்சியில் இருந்து சேகரிக்கும் குப்பைகள் ஒரே இடத்தில் குவித்து வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து குப்பை கிடங்கை அகற்ற கோரி வருகின்றனர்.
- கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1
- *30 பேரின் நிலைமை தெரியவில்லை. 20 பேர் மட்டுமே தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தகவல்.* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.1
- நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை...4
- புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரம் லேசான மழை நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆவராணி, விக்கனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 4:30 மணி முதல் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. காலை முதல் வெயில் வீசி வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.1
- ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.1
- தமிழக முதல்வர் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் ஆகியோரை அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுக்கா தம்பிக்கோட்டை கீழக்காடுவை சேர்ந்த செளந்தரராஜன் மகன் பாலமுருகன் என்பவர் தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்கள் அயராது உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தன்னிகரில்லா தலைவர் அவர்களையும் தமிழக வெற்றிக் கழக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளம் வாயிலாக தொடர்ந்து சிலரது தூண்டுதலின் பேரில் அவதூறு பரப்பியும் வருகிறார். இது தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகம் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது தளபதி அவர்களையும் டெல்டா பகுதியில் திருவாரூர் தெற்கு மாவட்ட பகுதியை ஒரு சிறப்பான நிர்வாகத்தை தரும் நோக்கோடு செயல்பட்டு வரும் டெல்டாவின் நாயகர் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி.பாரதி அவர்களையும் அவதூறு பரப்பும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாலமுருகன் என்பவர் மீது நடவடிக்கையும், அவதூறு பரப்பும் இணையதளத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டு திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்துள்ளனர்.1
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாய் 6.8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 8.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1