Shuru
Apke Nagar Ki App…
மல்லாங்கிணரில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. இதையொட்டி மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் மல்லாங்கிணர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து அருள்பெற்றனர். வழிபாட்டின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குமார்
மல்லாங்கிணரில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. இதையொட்டி மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் மல்லாங்கிணர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து அருள்பெற்றனர். வழிபாட்டின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
More news from Tamil Nadu and nearby areas
- மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.1
- ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..1
- ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார் பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.1