Shuru
Apke Nagar Ki App…
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல். மதுரை தெற்கு வாசல் என் எம் ஆர் பாலம் ஜெயவிலாஸ் ஷெட் அருகே இன்று (மார்ச்.16) மாலை வார்டு 86 பகுதியான கீரைத்துறை சுற்று வட்டாரங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை என்று கூறி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேசி தண்ணீர் முறையாக வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சு.இரத்தினவேல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல். மதுரை தெற்கு வாசல் என் எம் ஆர் பாலம் ஜெயவிலாஸ் ஷெட் அருகே இன்று (மார்ச்.16) மாலை வார்டு 86 பகுதியான கீரைத்துறை சுற்று வட்டாரங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை என்று கூறி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேசி தண்ணீர் முறையாக வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3
- திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன1
- Post by Natarajan Pitchaimani1
- ஆண்டிப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் - தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது அதன்படி தேர்தலின் போது பணப்பட்டு வாடா மற்றும் பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் தேனி மாவட்டம் முழுவதும் 20 க்கும் ஏற்பட்ட நிலையான கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவினருக்கு தேனி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து செய்து வருகின்றனர்.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் கார்த்திக் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரை மறித்து வாகனத்தை சோதனை செய்த போது, பைக் கவரில் ரூ.1லட்சம் ரொக்க பணம் இருந்தது.இதனைத் தொடர்ந்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் முத்தனம்பட்டியை சேர்ந்த செல்லபாண்டி என்பவரின் மகன் சந்துரு என்பதும், தான் வாடகை லாரி ஓட்டுவதாகவும் அதற்கான வாடகை பணத்தை வாங்கி வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆண்டிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கொண்டு வரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிபட்டி பகுதியில் 1லட்சம் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது1
- திண்டுக்கல் -மதுரை சாலையில் இன்று திடீரென தீப்பிடித்து எறிந்தது இந்த தீயின் காரணமாக வான் உயரத்தில் கரும்புகை இருந்த காரணத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டைகள் பெரும் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.1
- இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1
- பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.1