logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப் படவில்லை.... இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரம், பாம்புவிழுந்தன் கிராமத்தில் இருந்து அருள்மிகு. ராகப்பெருமாள் கோவில் வழியாக.... அருள்மிகு. பாத்தாளகாளி கோவில் மற்றும் அருள்மிகு. அம்மன் கோவில் வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப் படவில்லை.....சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது.... பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எஸ். அண்டக்குடி, பாம்புவிழுந்தன், ராஜிவ் நகர், ராம்நகர் மக்கள் மேற்கண்ட் கோவிகளுக்கும், மாவட்ட அரசு மருத்துவ மனைக்கும், பள்ளிகளுக்கும், காட்டுப்பரமக்குடிக்கும் சென்றுவரக்கூடியா பிறதான சாலையாக உள்ளது... இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரப் பகுதியி ஒரு பகுதியும் மற்றொரு பகுதியி பரமக்குடி ஊராட்சி பகுதியிலும் அமைத்துள்ள. நகராட்சி ஆணையாளர் அவர்கள் சாலை முழுவதையும் பராமரிக்க பரமக்குடி நகராட்சி வசம் ஒப்படைக்குமாறு கோறிவருகிறார்.... ஆனால் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மருத்துவ ருக்கிறார்கள்.... நீண்ட காலமாக சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது..... உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து.... சாலையை சீருமைத்துத்தர வேண்டுகிறோம்

1 hr ago
user_Sebastian Jeba
Sebastian Jeba
பரமக்குடி, ராமநாதபுரம், தமிழ்நாடு•
1 hr ago

சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப் படவில்லை.... இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரம், பாம்புவிழுந்தன் கிராமத்தில் இருந்து அருள்மிகு. ராகப்பெருமாள் கோவில் வழியாக.... அருள்மிகு. பாத்தாளகாளி கோவில் மற்றும் அருள்மிகு. அம்மன் கோவில் வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப் படவில்லை.....சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது.... பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எஸ். அண்டக்குடி, பாம்புவிழுந்தன், ராஜிவ் நகர், ராம்நகர் மக்கள் மேற்கண்ட் கோவிகளுக்கும், மாவட்ட அரசு மருத்துவ மனைக்கும், பள்ளிகளுக்கும், காட்டுப்பரமக்குடிக்கும் சென்றுவரக்கூடியா பிறதான சாலையாக உள்ளது... இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரப் பகுதியி ஒரு பகுதியும் மற்றொரு பகுதியி பரமக்குடி ஊராட்சி பகுதியிலும் அமைத்துள்ள. நகராட்சி ஆணையாளர் அவர்கள் சாலை முழுவதையும் பராமரிக்க பரமக்குடி நகராட்சி வசம் ஒப்படைக்குமாறு கோறிவருகிறார்.... ஆனால் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மருத்துவ ருக்கிறார்கள்.... நீண்ட காலமாக சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது..... உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து.... சாலையை சீருமைத்துத்தர வேண்டுகிறோம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.
    2
    30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி
மதுரை, பிப்.18-
மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார்.
இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது.
அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது:
“இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார்.
மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by மோகன்
    3
    Post by மோகன்
    user_மோகன்
    மோகன்
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by Saba Saba
    1
    Post by Saba Saba
    user_Saba Saba
    Saba Saba
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    1
    மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர்.
ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு.
தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்,
சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை,
இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர்,
ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர்,
மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்
    1
    வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி  உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
  • இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும்.  இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின் போது சஹர் எனப்படும் உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும்,சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், பரம்பூர், பெருமநாடு,, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை. உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். 30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திறளான முஸ்லீம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்
    1
    இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். 
இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். 
ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின் போது சஹர் எனப்படும்  உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும்,சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். 
இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து  முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், பரம்பூர், பெருமநாடு,, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை. உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம்.
30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.  அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திறளான முஸ்லீம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    3
    சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, பிப்.18- 
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 
சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர்
டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.