கல்யாண மேடையிலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு சென்ற புதுமண தம்பதி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கையில் நடந்த ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. சாதாரணமாக திருமண நாளில் புகைப்படங்கள், சடங்குகள், உறவினர்களின் கொண்டாட்டங்கள் எனவே நாளை கழிப்பார்கள். ஆனால், சிவகங்கை மேலவாணியங்குடியைச் சேர்ந்த ஹரி ஹர சுதன் – மேனகா தம்பதிகள், இந்த வழக்கத்தை உடைத்துள்ளனர். இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமணம் முடிந்ததும், இன்னும் மணமாலை கழிக்காமல், கல்யாண வேஷ்டி–சேலையிலேயே நேராக வாக்குச்சாவடிக்கு சென்றனர். அருகிலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், இருவரும் தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை முன்னிலைப்படுத்தினர். “கல்யாணம் வாழ்க்கையில் முக்கியம் தான்… ஆனா வாக்கு செலுத்துவது நாட்டுக்கு செய்யும் கடமை. அதனால தான் முதலில் இதை முடிச்சோம்,” என்று சிரிப்புடன் கூறிய ஹரி ஹர சுதன், இந்த நாளை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்யாண மேடையிலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு சென்ற புதுமண தம்பதி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கையில் நடந்த ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. சாதாரணமாக திருமண நாளில் புகைப்படங்கள், சடங்குகள், உறவினர்களின் கொண்டாட்டங்கள் எனவே நாளை கழிப்பார்கள். ஆனால், சிவகங்கை மேலவாணியங்குடியைச் சேர்ந்த ஹரி ஹர சுதன் – மேனகா தம்பதிகள், இந்த வழக்கத்தை உடைத்துள்ளனர். இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமணம் முடிந்ததும், இன்னும் மணமாலை கழிக்காமல், கல்யாண வேஷ்டி–சேலையிலேயே நேராக வாக்குச்சாவடிக்கு சென்றனர். அருகிலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், இருவரும் தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை முன்னிலைப்படுத்தினர். “கல்யாணம் வாழ்க்கையில் முக்கியம் தான்… ஆனா வாக்கு செலுத்துவது நாட்டுக்கு செய்யும் கடமை. அதனால தான் முதலில் இதை முடிச்சோம்,” என்று சிரிப்புடன் கூறிய ஹரி ஹர சுதன், இந்த நாளை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்காக காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தமிழரசி ரவிக்குமார் கடந்த மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வாக்களிப்பு அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டருக்குள் கட்சி நிர்வாகிகள் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த அதிரடிப்படை போலீசார் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எப்படி காவல்துறை தடியடி நடத்தலாம் ஆகவே தடியடிநடத்தியதில் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் யாரும் வாக்களிக்க செல்லாத நிலையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 1018 வாக்குகள் உள்ள வாக்குசாவடி மையத்தில் 306 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி பூதிபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் பூத் எண் 148 காலையிலிருந்து வாக்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றது மாலை 6:00 மணிக்கு வாக்களிப்பதற்கான நேரம் முடிந்தது அதன் நிலவரப்படி மொத்த வாக்காளர் 790 வாக்குகள் பதிவு பெற்றது 737 93% சதவீதம் இதில் ஆண்கள் 352 பெண்கள் 385 வாக்குகள் பதிவு பெற்று நிறைவு செய்யப்பட்டன ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது1
- தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பெரியகுளம் தெங்கறையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் மக்கள் எழுச்சியுடன் ஆர்வத்துடன் திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி நான் சென்று கொண்டே இருப்பேன் இரட்டை இலைக்கு விழுகும் வாக்கு எனக்காக விழுந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளார் அது குறித்து உங்கள் கருத்து என கேட்டபோது கடந்த தேர்தலில் நாராயணசாமி டெபாசிட் இழந்துள்ளார் அவருக்கு எப்படி வாக்கு பொதுமக்கள் அளிப்பார்கள் நீங்கள் அவர் எப்படி வெற்றி பெறுவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய போது விஜய் முதல் தேர்தலை தற்போது சந்தித்துள்ளார் மே 4 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளிவந்த பிறகு மக்கள் எவ்வாறு அவருக்கு வாக்களித்து உள்ளார்கள் என பார்த்த பிறகு அதற்கான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்1
- தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் கணேஷ் நகரில் உள்ள வேட்பாளரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணம் பதுக்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தென்பாகம் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டிலும் பெரிய அளவிலான தொகை சிக்கியிருப்பது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- மக்கள்_Vs_ஜனநாயகம் !!! மறவாதீர் ஓட்டு உங்கள் உரிமை !!! #publicintrest #publicresponse #election1
- முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளம் தென்கரை உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.அதன் பின்பு தேனி முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தனது வாக்கை பதிவு செய்தார்1
- MH 🌐 ONLINE.....1
- தென்காசி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ராம்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்1