பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அருகே மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வேம்பனேரி பகுதியில் அமைந்துள்ள மஹா ஸ்ரீ ருத்ரவன்னியன் குருபூஜை விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தும் அதேபோல் ஆண்கள் அக்னி கரகம் எடுத்து வந்தும் வழிபட்டனர்... முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலம்பாட்டம், கும்மியாட்டம் மற்றும் பல்வேறு கடவுள்களின் வேடங்கள் அணியப்பட்டு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். மேலும் மஹா ஸ்ரீ ருத்ரவன்னிய சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது... மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...

- தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இயேசுவின் உயிர்ப்பு தினமான ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி மற்றும் குருக்கள் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1
- பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் எம்பி செந்தில் |குமார் மனு தாக்கல். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் முன்னாள் எம்பி டாக்டர் டி.என்.வி. எஸ். செந்தில் குமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், இன்று கூட்டணி கட்சியினருடன் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்று, பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். இதில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை புதூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் இருந்து அழகு குத்துதல் தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மங்கள மேளதாளங்கள் முழங்க வைபுதூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் வைபுதூர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சேத்துமடை,அண்ணாநகர்,கோழிப்பண்ணை தேவிபட்டினம்,வேட்டைக்காரன் புதூர் பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது! #BJP#ADMk#1
- மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம் திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் R.கதிரவன் இன்று காலை தேர்தல் அதிகாரி ஜெயசித்ரா கலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்து பூத் பொறுப்பாளரான கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணப்பாறையின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1