திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்தி திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்
திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்தி திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்
- குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை புதூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் இருந்து அழகு குத்துதல் தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மங்கள மேளதாளங்கள் முழங்க வைபுதூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் வைபுதூர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது1
- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.1
- தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவிலின் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த த வெ க சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின் வாசிக்கப்படும் கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார். உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.1
- பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் பாபநாசத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் ஊர்வலமாக வந்து பாபநாசம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிசந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்..ஊர்வலத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தியாக சுரேஷ், பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், நகர செயலாளர்கள் சீனு, தியாக ரமேஷ், கபிலன், துளசி அய்யா. கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், விசிக மாவட்ட செயலாளர் நதியா, மற்றும் தேமுதிக.முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்,1
- தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டாட்சியர் பங்கேற்பு: மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வுகள்: * சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். * முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. * விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. * வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். * கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.2
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும் பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1