தேவாலயத்தின் முன்பு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
தேவாலயத்தின் முன்பு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை அதிகமாக புழுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து மாலை நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 10:20 மணிக்கு கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் பொன் பாலகணபதி, அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி, கூட்டணி பலம் காரணமாக மானாமதுரை மீண்டும் தங்களுக்கே கிடைக்கும் என்றார். கடந்த தேர்தலை விட அதிக ஆதரவு உள்ளதால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். தற்போதைய எம்எல்ஏ மீது மக்கள் அதிருப்தி உள்ளதாக குற்றம்சாட்டினார். வெற்றி பெற்றால் இளையான்குடியில் குடிநீர், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்படும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஐடி நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என்றார்.1
- தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது1
- கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்1
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தன் இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் அடுத்த வடுகம் ஊராட்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் எம் பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.1
- திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்1
- தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டாட்சியர் பங்கேற்பு: மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வுகள்: * சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். * முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. * விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. * வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். * கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.2
- ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் அன்பு இவரது வீட்டில் லவ் பேர்ட்ஸ் வளர்த்து வருகிறார் இதில் இன்று காலையில் லவ் பேர்ட்ஸ் அதிகமாக சத்தமிட்டது இதனையடுத்து அதனை வந்து பார்த்த போது கூண்டுக்குள் நல்ல பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர்1