Shuru
Apke Nagar Ki App…
மதுரை திருப்பரங்குன்றத்தில் "அரோகரா" கோஷத்துடன் தேரோட்டம். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சு.இரத்தினவேல்
மதுரை திருப்பரங்குன்றத்தில் "அரோகரா" கோஷத்துடன் தேரோட்டம். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் பாலகணபதி, தனது அறிமுக தேர்தல் பரப்புரையை மானாமதுரையில் நேற்று தொடங்கினார். அண்ணா சிலைக்கு மரியாதை பரப்புரையை முன்னிட்டு, மானாமதுரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பொன் பாலகணபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி ஆரம்பித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு இந்நிகழ்வின் போது வேட்பாளருடன் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்: * அஇஅதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். * நகரச் செயலாளர்கள். * தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். இந்த அறிமுக பரப்புரையின் போது, கூட்டணி கட்சியினர் உற்சாகமாகப் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர். மானாமதுரை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பரப்புரை, அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.1
- *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு* *தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார் சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார் குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அவர் பேசியதாவது: “நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன் ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது “ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான் இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய். உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம் நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்” பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்1
- திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்1
- கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்1
- Post by மா.சுடலைமணி1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்குப் பிறகு சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கிய நிலையில், டாடா ஏஸ் வாகனம் பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் சாலைகள் அரைகுறையாக இருப்பதால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் சிரமப்படுகின்றனர். சாலைகள் சீரமைப்பு மற்றும் கால்வாய் சுத்தம் உடனடியாக செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் R.கதிரவன் இன்று காலை தேர்தல் அதிகாரி ஜெயசித்ரா கலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்து பூத் பொறுப்பாளரான கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணப்பாறையின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.1
- குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை புதூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் இருந்து அழகு குத்துதல் தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மங்கள மேளதாளங்கள் முழங்க வைபுதூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் வைபுதூர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1