Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உயிர்த்தாண்டவரின் ஆசீரைப்பெற்றுப் சென்றனர்.
மா.சுடலைமணி
தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உயிர்த்தாண்டவரின் ஆசீரைப்பெற்றுப் சென்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by மா.சுடலைமணி1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்.அவர்கள் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்களை பார்வையிட்டனர்.1
- தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது1
- தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டாட்சியர் பங்கேற்பு: மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வுகள்: * சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். * முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. * விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. * வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். * கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.2
- மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- Post by மா.சுடலைமணி1