logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை நாகை மாவட்டம் சிக்கல் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளான புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்து மாலை 5 மணிக்குள் மின் சேவை திரும்ப வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 hrs ago
user_Manikandan
Manikandan
Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
23 hrs ago
1673e3f2-e100-42d4-be82-f453983f5c59

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை நாகை மாவட்டம் சிக்கல் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளான புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்து மாலை 5 மணிக்குள் மின் சேவை திரும்ப வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More news from Nagapattinam and nearby areas
  • திருக்குவளையில் கிரியேட் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் 20-வது தேசிய நெல் திருவிழா நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள சமத்துவபுரத்தில் கிரியேட் நமது நெல்லைக் காப்போம் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் 20வது தேசிய நெல் திருவிழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சேவாலயா தொண்டு நிறுவன செயலாளர் என்.முருகபெருமாள் வரவேற்றார். கிரியேட் நிறுவன திட்ட இயக்குனர் கே.சுரேஷ் கண்ணா தலைமை வகுத்தார். பாரம்பரிய நெல் விதைகளை தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகம்மது இப்ராஹிம் விவசாயிகளுக்கு வழங்கி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேசியபோது: தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி இயற்கை விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் கொண்டு வந்து அனைத்து மாவட்டங்களில் இயற்கை விவசாய பொருட்களுக்கு மாவட்டங்கள் தோறும் சந்தைகளை தொடங்க வேண்டும். அச்சு வெள்ளம் பனை வெல்லம், தேங்காய் விற்பனை கூடங்களை கொண்டு வர வேண்டும்.கள்ளுகடை திறக்க வேண்டும். தமிழக முதல்வர் திருவாரூரில் தேசிய பாரம்பரிய நெல் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த வேண்டும். இயற்கை வேளாண் ஆராய்ச்சி கல்லூரிகளை திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் பாரம்பரிய அரிசி கடைகளை நெல். ஜெயராமன் பெயரில் திறக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.இதில் மாநில பொருளாளர் சி.கிருஷ்ணன், மாநில துணை தலைவர் எம்.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் எம்.முகமது சபீக், வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) வீ.பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.பழனியப்பன், நாகை மாவட்ட தலைவர் கே.அனிதா, நாகை மாவட்ட செயலாளர் ஜி.செல்வம், தஞ்சை மாவட்ட தலைவர் கே. மாரிமுத்து, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பி.அண்ணாதுரை, சேவாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.செல்வராஜ், நாகை மாவட்ட மகளிரணி செயலாளர் எஸ்.கஸ்தூரி, கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துக்கொண்டனர். இறுதியாக சேவாலயா கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.பாரதிமோகன் நன்றியுரை வழங்கினார்.
    1
    திருக்குவளையில் கிரியேட் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் 20-வது தேசிய நெல் திருவிழா
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள சமத்துவபுரத்தில் கிரியேட் நமது நெல்லைக் காப்போம் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் 20வது தேசிய நெல் திருவிழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சேவாலயா தொண்டு நிறுவன செயலாளர் என்.முருகபெருமாள் வரவேற்றார். கிரியேட் நிறுவன திட்ட இயக்குனர் கே.சுரேஷ் கண்ணா தலைமை வகுத்தார். பாரம்பரிய நெல் விதைகளை தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகம்மது இப்ராஹிம் விவசாயிகளுக்கு வழங்கி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேசியபோது: தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி இயற்கை விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் கொண்டு வந்து அனைத்து மாவட்டங்களில் இயற்கை விவசாய பொருட்களுக்கு மாவட்டங்கள் தோறும் சந்தைகளை தொடங்க வேண்டும். அச்சு வெள்ளம் பனை வெல்லம், தேங்காய் விற்பனை கூடங்களை  கொண்டு வர வேண்டும்.கள்ளுகடை திறக்க வேண்டும். தமிழக முதல்வர் திருவாரூரில் தேசிய பாரம்பரிய நெல் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த வேண்டும். இயற்கை வேளாண் ஆராய்ச்சி கல்லூரிகளை திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் பாரம்பரிய அரிசி கடைகளை நெல். ஜெயராமன் பெயரில் திறக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.இதில் மாநில பொருளாளர் சி.கிருஷ்ணன், மாநில துணை தலைவர் எம்.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் எம்.முகமது சபீக், வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) வீ.பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.பழனியப்பன், நாகை மாவட்ட தலைவர் கே.அனிதா, நாகை மாவட்ட செயலாளர்  ஜி.செல்வம்,  தஞ்சை மாவட்ட தலைவர் கே. மாரிமுத்து, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பி.அண்ணாதுரை, சேவாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.செல்வராஜ், நாகை மாவட்ட மகளிரணி செயலாளர் எஸ்.கஸ்தூரி, கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துக்கொண்டனர். இறுதியாக சேவாலயா கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.பாரதிமோகன் நன்றியுரை வழங்கினார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    21 hrs ago
  • கும்பகோணம் அருகே கொட்டையூரில் தீ விபத்தில் குடிசை வீடு சேதம் கும்பகோணம் அருகே கொட்டையூர், மேலத்தெரு ஆறுமுகம் மகன் ஜெயக்குமார் கொத்தனார். இவர் சுவாமிமலை அருகே கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கண்டு அலறி அடித்துக் கொண்டு, தண்ணீரை ஊற்றியும், கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து அடிப்படை பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்தவர்கள் கேஸ் அடுப்பு சிலிண்டரை உடனே வெளியே எடுத்துச் சென்றதால் பெரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    1
    கும்பகோணம் அருகே கொட்டையூரில் தீ விபத்தில் குடிசை வீடு சேதம் 

கும்பகோணம் அருகே கொட்டையூர், மேலத்தெரு ஆறுமுகம் மகன் ஜெயக்குமார் கொத்தனார். இவர் சுவாமிமலை அருகே கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட  அக்கம் பக்கத்தினர் கண்டு அலறி அடித்துக் கொண்டு, தண்ணீரை ஊற்றியும், கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து அடிப்படை பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்தவர்கள் கேஸ் அடுப்பு சிலிண்டரை உடனே வெளியே எடுத்துச் சென்றதால் பெரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து  கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை கோரி விண்ணப்பித்து தகுதி இருந்தும் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் இன்று  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை கோரி விண்ணப்பித்து தகுதி இருந்தும் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • कुडाळ तालुक्यातील पिंगुळीत थरारक बचाव कार्य: दोन दिवसांच्या अथक प्रयत्नांनंतर तलावातून मगर जेरबंद; नैसर्गिक अधिवासात सुरक्षित मुक्ती कुडाळ तालुक्यातील पिंगुळी येथे एका तलावात मगर शिरल्याची घटना समोर आली असून, वनविभागाच्या द्रुत कृती दलाने (RRT) आणि कर्मचाऱ्यांनी तब्बल दोन दिवस चाललेल्या अत्यंत कठीण आणि जोखमीच्या मोहिमेनंतर मगरीला सुखरूप जेरबंद केले. मगरीची प्रकृती उत्तम असल्याचे स्पष्ट झाल्यानंतर तिला तिच्या नैसर्गिक अधिवासात सुरक्षितपणे सोडण्यात आले आहे. बचाव कार्यापुढील आव्हाने आणि थरारक मोहीम २४ व २५ ऑगस्ट रोजी पिंगुळी येथील तलावात मगर पडल्याची माहिती ग्रामस्थांनी तात्काळ वनविभागाला दिली. यानंतर वनविभागाची RRT टीम आणि स्टाफने तातडीने घटनास्थळी धाव घेत बचाव कार्य सुरू केले. मात्र, तलाव अत्यंत खोल असल्याने आणि पाण्याचा साठा जास्त असल्यामुळे मगर पकडणे मोठे आव्हानात्मक ठरत होते. परिस्थितीचे गांभीर्य लक्षात घेत मड पंपच्या साहाय्याने तलावातील पाणी कमी करण्यात आले. असे असले तरी, एका बाजूने पाण्याचा सतत सुरू असलेला प्रवाह आणि तलावात साचलेला बराच गाळ यामुळे बचाव कार्यात वारंवार अडथळे निर्माण होत होते. तरीही, न खचता दोन दिवसांतील जवळपास ५ ते ६ तासांच्या कल्पक व धाडसी प्रयत्नांनंतर वनक्षेत्रपाल कार्यालय कुडाळचे कर्मचारी आणि RRT टीमला मगरीला पकडण्यात अखेर यश आले. या संपूर्ण मोहिमेत पिंगुळीच्या ग्रामस्थांनी मोलाचे सहकार्य केले.
    1
    कुडाळ तालुक्यातील पिंगुळीत थरारक बचाव कार्य: दोन दिवसांच्या अथक प्रयत्नांनंतर तलावातून मगर जेरबंद; नैसर्गिक अधिवासात सुरक्षित मुक्ती
कुडाळ तालुक्यातील पिंगुळी येथे एका तलावात मगर शिरल्याची घटना समोर आली असून, वनविभागाच्या द्रुत कृती दलाने (RRT) आणि कर्मचाऱ्यांनी तब्बल दोन दिवस चाललेल्या अत्यंत कठीण आणि जोखमीच्या मोहिमेनंतर मगरीला सुखरूप जेरबंद केले. मगरीची प्रकृती उत्तम असल्याचे स्पष्ट झाल्यानंतर तिला तिच्या नैसर्गिक अधिवासात सुरक्षितपणे सोडण्यात आले आहे.
बचाव कार्यापुढील आव्हाने आणि थरारक मोहीम
२४ व २५ ऑगस्ट रोजी पिंगुळी येथील तलावात मगर पडल्याची माहिती ग्रामस्थांनी तात्काळ वनविभागाला दिली. यानंतर वनविभागाची RRT टीम आणि स्टाफने तातडीने घटनास्थळी धाव घेत बचाव कार्य सुरू केले. मात्र, तलाव अत्यंत खोल असल्याने आणि पाण्याचा साठा जास्त असल्यामुळे मगर पकडणे मोठे आव्हानात्मक ठरत होते.
परिस्थितीचे गांभीर्य लक्षात घेत मड पंपच्या साहाय्याने तलावातील पाणी कमी करण्यात आले. असे असले तरी, एका बाजूने पाण्याचा सतत सुरू असलेला प्रवाह आणि तलावात साचलेला बराच गाळ यामुळे बचाव कार्यात वारंवार अडथळे निर्माण होत होते. तरीही, न खचता दोन दिवसांतील जवळपास ५ ते ६ तासांच्या कल्पक व धाडसी प्रयत्नांनंतर वनक्षेत्रपाल कार्यालय कुडाळचे कर्मचारी आणि RRT टीमला मगरीला पकडण्यात अखेर यश आले. या संपूर्ण मोहिमेत पिंगुळीच्या ग्रामस्थांनी मोलाचे सहकार्य केले.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    15 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் ‌ அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக பேசினார்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய  பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் ‌ அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக
பேசினார்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருவாடானையில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் "கேப்டன்" விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.திருவாடானை ஒன்றியச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
    1
    தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருவாடானையில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் "கேப்டன்" விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.திருவாடானை ஒன்றியச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.
    4
    மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் 
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • கறம்பக்குடியில் வெறிநாய் கடித்து அரசு பள்ளி மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெறி நாய் கடித்ததில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் சரண் இன்று காலை வழக்கம்போல் தனது தாய் கனகாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது தட்டாவூரணி கிராமத்தில் வெறிநாய் ஒன்று இருசக்கர வாகனத்தை துரத்தி வந்து மாணவன் சரணை கடித்துள்ளது. இதில் காயமடைந்த மாணவன் சரண் உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தட்டாவூரணி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    கறம்பக்குடியில் வெறிநாய் கடித்து அரசு பள்ளி மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதி 
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெறி நாய் கடித்ததில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 
குழந்திரான்பட்டு அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் சரண் இன்று காலை வழக்கம்போல் தனது தாய் கனகாவுடன்  இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது தட்டாவூரணி கிராமத்தில்  வெறிநாய் ஒன்று இருசக்கர வாகனத்தை துரத்தி வந்து மாணவன் சரணை கடித்துள்ளது.
இதில் காயமடைந்த மாணவன் சரண் உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தட்டாவூரணி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.