கும்பகோணம் அருகே கொட்டையூரில் தீ விபத்தில் குடிசை வீடு சேதம் கும்பகோணம் அருகே கொட்டையூர், மேலத்தெரு ஆறுமுகம் மகன் ஜெயக்குமார் கொத்தனார். இவர் சுவாமிமலை அருகே கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கண்டு அலறி அடித்துக் கொண்டு, தண்ணீரை ஊற்றியும், கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து அடிப்படை பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்தவர்கள் கேஸ் அடுப்பு சிலிண்டரை உடனே வெளியே எடுத்துச் சென்றதால் பெரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
கும்பகோணம் அருகே கொட்டையூரில் தீ விபத்தில் குடிசை வீடு சேதம் கும்பகோணம் அருகே கொட்டையூர், மேலத்தெரு ஆறுமுகம் மகன் ஜெயக்குமார் கொத்தனார். இவர் சுவாமிமலை அருகே கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கண்டு அலறி அடித்துக் கொண்டு, தண்ணீரை ஊற்றியும், கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து அடிப்படை பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்தவர்கள் கேஸ் அடுப்பு சிலிண்டரை உடனே வெளியே எடுத்துச் சென்றதால் பெரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- கறம்பக்குடியில் வெறிநாய் கடித்து அரசு பள்ளி மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெறி நாய் கடித்ததில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் சரண் இன்று காலை வழக்கம்போல் தனது தாய் கனகாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது தட்டாவூரணி கிராமத்தில் வெறிநாய் ஒன்று இருசக்கர வாகனத்தை துரத்தி வந்து மாணவன் சரணை கடித்துள்ளது. இதில் காயமடைந்த மாணவன் சரண் உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தட்டாவூரணி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக பேசினார்.1
- முசிறியில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 74 வது பிறந்த தின விழா கட்சியினர் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடினார் முசிறியில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 74 வது பிறந்த தினம் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறி, ஆக, 25- முசிறி அண்ணா சிலை அருகே மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 74 வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தேமுதிகவினர் நலத்திட்ட உதவி மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர் . நிகழ்ச்சிக்கு தேமுதிக நகரச் செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம், நகர அவை தலைவர் பாலன்,நகர துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், சுரேஷ்,மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பூக்கடை பாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் வனஜா, முசிறி தொகுதி பொறுப்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குமார் கலந்துகொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், வார்டு செயலாளர்கள் குமரவேல், மதியழகன், லோகநாதன், மணிகண்டன், தேவேந்திரன், நாச்சம்பட்டி துரை, பாலசுப்பிரமணி, செல்வராஜ், தர்மலிங்கம் அங்கமுத்து, மளிகை கடை ராஜா, நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் பெத்தானியா ஆனந்தராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.4
- தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.2
- வளநாடு அருகே வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் . வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .1
- மணப்பாறை அருகே எருதுகுட்டை சாமி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சடையம்பட்டியில் உள்ள எருதுகுட்டை சாமி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி எனும் எருது ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் குறிப்பிட்ட தூரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஒரே நேரத்தில் விரட்டி விடப்பட்டது. அப்போது இலக்கை நோக்கி போட்டி போட்டுக் கொண்ட காளைகள் ஓடி வெற்றி பெற்றது. பின்னர் தேவராட்டமும் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.2
- வெள்ளியணை தேவேந்திர நகரில் ஸ்ரீ விநாயகர், மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது மிக சிறப்பாக நடந்து முடிந்தது போல் நியூஸ் வாசிப்பு வாசகம் இதோ: --- *வணக்கம்! இன்றைய ஆன்மீக செய்தி* கரூர் மாவட்டம், வெள்ளியணை வடபாகம், தேவேந்திர நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களான ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாசி பெரியசாமி, ஸ்ரீ பெரியக்காள், ஸ்ரீ மலையாளி திருக்கோயிலின் *மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.* கடந்த ஆவணி 5-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், 216 ஹோம திரவிய ஹோமங்கள், காயத்ரி மந்திர ஜெப ஹோமங்கள், துர்கா பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம் ஆகியவை மிக பக்தி பூர்வமாக நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் *ஆவணி 7-ஆம் தேதி (24.08.2026) திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்* மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்தூபிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்ட போது, திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தில் மெய்மறந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவை இறையருள் இறைபணியாளர் *பா.கணேஷ் சிவாச்சாரியார்* அவர்களும், *புலிக்குட்டி (எ) குருசரண் பட்டர்* அவர்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் வடிவமைப்பாளர் *R.நல்லதம்பி சிற்பி* அவர்கள் மற்றும் விழா குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பெரும் ஆதரவுடன் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவு பெற்றது.1
- தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருவாடானையில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் "கேப்டன்" விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.திருவாடானை ஒன்றியச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.1