வளநாடு அருகே வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் . வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .
வளநாடு அருகே வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் . வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .
- மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.4
- வளநாடு அருகே வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் . வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .1
- முசிறியில் பள்ள வாய்க்கால் பாசனப்பகுதி விவசாயிகள் பாதை கோரி சப் கலெக்டரிடம் மனு. முசிறியில் பள்ள வாய்க்கால் பாசன பகுதி விவசாயிகள் பாதை கோரி சப் கலெக்டரிடம் மனு. முசிறி, ஆக. 25- முசிறி கிழக்கு கிராம பள்ள வாய்க்கால் பெரிய களம் பாதையானது வடக்கு நோக்கி சென்று, பின்னர் மேற்கு நோக்கி செல்லும் வழியாக உள்ளது. மேற்படிப்பாதையில் விவசாயிகள், தங்களது விவசாய நிலத்திற்கு தேவையான இடுபொருட்களை சுமந்தபடி நடந்து சென்று, பணிகளை மேற்கொள்ளவும். மேலும் அறுவடை காலங்களில் அந்த வழியாகவே தானியங்களை தலையில் சுமந்து பணிகளை மேற்கொள்வதால் பள்ள வாய்க்காலின் கிழக்குக்கரை மற்றும் வடக்கு கரை பாதைகளை சர்வே செய்து, வண்டி வாகன உதவியுடன் விவசாய இடுபொருள்களை கொண்டு செல்வதற்கும், விவசாய தானியங்களை வண்டி வாகனத்தில் எடுத்து வருவதற்கும், பாதைகள் அமைத்து, விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டி சப் கலெக்டர் சுசூரி ஸ்வாங்கி குந்தியாவிடம் பள்ள வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.1
- வெள்ளியணை தேவேந்திர நகரில் ஸ்ரீ விநாயகர், மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது மிக சிறப்பாக நடந்து முடிந்தது போல் நியூஸ் வாசிப்பு வாசகம் இதோ: --- *வணக்கம்! இன்றைய ஆன்மீக செய்தி* கரூர் மாவட்டம், வெள்ளியணை வடபாகம், தேவேந்திர நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களான ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாசி பெரியசாமி, ஸ்ரீ பெரியக்காள், ஸ்ரீ மலையாளி திருக்கோயிலின் *மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.* கடந்த ஆவணி 5-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், 216 ஹோம திரவிய ஹோமங்கள், காயத்ரி மந்திர ஜெப ஹோமங்கள், துர்கா பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம் ஆகியவை மிக பக்தி பூர்வமாக நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் *ஆவணி 7-ஆம் தேதி (24.08.2026) திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்* மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்தூபிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்ட போது, திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தில் மெய்மறந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவை இறையருள் இறைபணியாளர் *பா.கணேஷ் சிவாச்சாரியார்* அவர்களும், *புலிக்குட்டி (எ) குருசரண் பட்டர்* அவர்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் வடிவமைப்பாளர் *R.நல்லதம்பி சிற்பி* அவர்கள் மற்றும் விழா குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பெரும் ஆதரவுடன் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவு பெற்றது.1
- லயன்ஸ் லாட்டரி சங்க உறுப்பினர்கள் த பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் சந்திப்பு விழா தி பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் ஆயுட்கால உறுப்பினரும், லயன்ஸ் இயக்கத்தில் எங்களோடு சேர்ந்து சேவை செய்தவரும் மதன்ஜெகன் டிராவல்ஸ் உரிமையாளர் அண்ணன் Ln. P. தட்சிணாமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று 24.8.26 அன்று போலிஷ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வாக்கர்ஸ் கிளப்பின் நண்பர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினோம். திரைப்பட நடிகரும் அவருடைய மூத்த மகனுமான நடிகர் திரு. மதன் அவர்களோடு ஒரு இனிமையான சந்திப்பு உரையாடலும் நடந்தது மறக்க முடியாத இனிய தருணம்.1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக பேசினார்.1
- மணப்பாறை அருகே எருதுகுட்டை சாமி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சடையம்பட்டியில் உள்ள எருதுகுட்டை சாமி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி எனும் எருது ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் குறிப்பிட்ட தூரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஒரே நேரத்தில் விரட்டி விடப்பட்டது. அப்போது இலக்கை நோக்கி போட்டி போட்டுக் கொண்ட காளைகள் ஓடி வெற்றி பெற்றது. பின்னர் தேவராட்டமும் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.2