Shuru
Apke Nagar Ki App…
லயன்ஸ் லாட்டரி சங்க உறுப்பினர்கள் த பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் சந்திப்பு விழா தி பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் ஆயுட்கால உறுப்பினரும், லயன்ஸ் இயக்கத்தில் எங்களோடு சேர்ந்து சேவை செய்தவரும் மதன்ஜெகன் டிராவல்ஸ் உரிமையாளர் அண்ணன் Ln. P. தட்சிணாமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று 24.8.26 அன்று போலிஷ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வாக்கர்ஸ் கிளப்பின் நண்பர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினோம். திரைப்பட நடிகரும் அவருடைய மூத்த மகனுமான நடிகர் திரு. மதன் அவர்களோடு ஒரு இனிமையான சந்திப்பு உரையாடலும் நடந்தது மறக்க முடியாத இனிய தருணம்.
6974
லயன்ஸ் லாட்டரி சங்க உறுப்பினர்கள் த பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் சந்திப்பு விழா தி பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் ஆயுட்கால உறுப்பினரும், லயன்ஸ் இயக்கத்தில் எங்களோடு சேர்ந்து சேவை செய்தவரும் மதன்ஜெகன் டிராவல்ஸ் உரிமையாளர் அண்ணன் Ln. P. தட்சிணாமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று 24.8.26 அன்று போலிஷ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வாக்கர்ஸ் கிளப்பின் நண்பர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினோம். திரைப்பட நடிகரும் அவருடைய மூத்த மகனுமான நடிகர் திரு. மதன் அவர்களோடு ஒரு இனிமையான சந்திப்பு உரையாடலும் நடந்தது மறக்க முடியாத இனிய தருணம்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வையும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக நீக்கம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் இருசக்கர வாகன பரப்பரை பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணமானது இன்று திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு நீக்கம் குறித்து பரப்புரை நடைபெற்றது. இதுவில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி 2017 ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த நீட் தேர்வு தகுதியும் தரத்தையும் வளர்ப்பதற்காக என்று கூறினார்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மார்க்குகள் 196.75 கட் ஆப் மார்க் எடுத்து வறுமையின் கோரப்ப்பிடியிலும் கூட மருத்துவராகுவேன் லட்சியத்தோடு படித்து பெயர் எடுத்த பிள்ளைதான் அரியலூரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த அனிதா என்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் பிரிவில் படி தான் நீட் தேர்வை நடத்துவேன் என்று மூடி கூறுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்க கூடிய திட்டத்தை கொண்டு வந்த கொடூரமான பாசிச ஆட்சி தான் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி மோடியின் ஆட்சி கடந்த ஐந்து வருடமாக நீட் தேர்வுக்கு எதிராக ஏன் நீங்கள் போராடவில்லை என்று நேற்று முளைத்தவர்கள் எல்லாம் இன்று எங்களை கேள்வி கேட்கிறார்கள் நீட் தேர்வை ஒழிக்க கோரி 2017 ஆம் ஆண்டு இதேபோல் இருசக்கர வாகனம் பயணம் சென்றோம். கடந்த திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டிலும் இதே இருசக்கர வாகன பயணம் சென்றோம் கடந்த ஆட்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம் என்று துணிச்சலோடு முதுகெலும்போடு சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆட்சியாக கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சி அமைந்தது. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராடினார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடர் கழகத்தோடு சேர்ந்து ஆளுங்க கட்சியான திமுகவும் போராடியது. இதுவரை நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஸ்டேதஸ் போப் மாட்ட வேண்டிய கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 200 முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ஆனால் நீ ஏழை இல்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை யார் என்றால் நாள் ஒன்றுக்கு 2200 ரூபாய் மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக் கூடிய பிராமணர், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களா அவர்கள் ஏழையா அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி கடன் கொடுக்க வேண்டும் ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் வங்கியில் வட்டி இல்லாமல் கடன் கொடுங்கள் அதை விட்டுவிட்டு சமூகநீதி இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் கொடுப்போம் என்று மிகப்பெரிய முட்டாள்தனத்தை அயோக்கியத்தனத்தை சமூக அநீதியை செய்யக்கூடிய பாஜக மோடி அரசை கண்டித்து தான் இருசக்கர வாகன பரப்பரை நடத்தி வருகிறோம் என்றும் தமிழ்நாட்டில் 10 சதவீத GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். தற்போது அமைந்திருக்க கூடிய புதிய ஆட்சி எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் 10 சதவீதம் GWS இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதற்காக இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்று வருகிறதாக பேசினார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை கோரி விண்ணப்பித்து தகுதி இருந்தும் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.1
- மணப்பாறை அருகே மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆடிப் பாடி கொண்டாடி வெளிப்படுத்தினர். அவர்களோடு மாணவ - மாணவிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் நெருப்பில்லாமலும், நெருப்பு பயன்படுத்தியும் பல்வேறு திண்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளை பாரம்பரியம் மாராமல் செய்து அசத்தினர். காப்பகத்தில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சி கவனம் ஈர்த்தது.4
- வளநாடு அருகே வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது. திருச்சி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அடிப்படை பிரிவு போலீசார் கோவில்பட்டி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் . வளநாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் தாமோதரன் 43 என்பது தெரிய வந்தது .மேலும் அவன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2 கிலோவில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது . அதனைத் தொடர்ந்து அவன் மீது வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.மேலும் 4 கிலோ கஞ்சா,எடை மெஷின் ,மொபைல் போன் இரண்டு,ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .1
- அம்பேத்கரை சாதித் தலைவர் என குறிப்பிட்ட பேரூராட்சித் தலைவர்? இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் சலசலப்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் (திமுக) தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் ராஜவேலு பேசுகையில், பேரூராட்சி கூட்டரங்கில் முதல்வர் விஜயின் புகைப்படம் அருகே அம்பேத்கரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் எனக் கூறி, அவரது புகைப்படத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கியதாகவும், இதுவரை புகைப்படம் வைக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன், “அம்பேத்கர் உங்களது சாதித் தலைவர் என்பதால் அவரது புகைப்படத்தை வைக்கக் கேட்கிறீர்களா?” என கூறி அம்பேத்கர் புகைப்படத்தை கூட்டரங்கில் வைக்க முடியாது என அவர் தெரிவித்ததார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் ராஜவேலு, “அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். அவரை எப்படி சாதித் தலைவர் என்று கூறலாம்?” என கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மற்றொரு கவுன்சிலர் ஜமிமா பேசுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் பேரூராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதல்வரின் புகைப்படம் வைக்கப்படாததற்கு, கட்சித் தலைவர் சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததே காரணம் என்றும், “அனைவரது மனதிலும் இருந்தால் மட்டும் போதும்” என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். தற்போதைய முதல்வரின் புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, அம்பேத்கர் புகைப்படத்தை பேரூராட்சி நிர்வாகம் வைக்கவில்லை என்றால், தங்களிடம் புகைப்படத்தை வழங்குமாறு சுயேச்சை கவுன்சிலர் ராஜவேலு வலியுறுத்தியதால் கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.1
- தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருவாடானையில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் "கேப்டன்" விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, நான்கு ரோடு சந்திப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.திருவாடானை ஒன்றியச் செயலாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.1
- மேலூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன் சிவன் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு! மேலூரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இன்று மாலை 4:00 பிரதோஷ வழிபாடு நடைபெற உள்ளது. பிரதோஷ வழிபாடுக்கு தேவையான தயிர்,பால் மற்றும் அபிஷேகப் பொருட்கள் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். பிரதோஷ வழிபாடு இன்று மாலை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.1
- கறம்பக்குடியில் வெறிநாய் கடித்து அரசு பள்ளி மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெறி நாய் கடித்ததில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் சரண் இன்று காலை வழக்கம்போல் தனது தாய் கனகாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது தட்டாவூரணி கிராமத்தில் வெறிநாய் ஒன்று இருசக்கர வாகனத்தை துரத்தி வந்து மாணவன் சரணை கடித்துள்ளது. இதில் காயமடைந்த மாணவன் சரண் உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தட்டாவூரணி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.1