Shuru
Apke Nagar Ki App…
பழனி அருகே தோட்டத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - ஒருவர் கைது திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோமாளிப்புதூரில் வினோத் குமார் என்பவர் தோட்டத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி சிவகிரிபட்டியை சேர்ந்த நவாஸ் மகன் ரியாஸ்உசேன்(19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து காப்பர் வயர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Natarajan Pitchaimani
பழனி அருகே தோட்டத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - ஒருவர் கைது திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோமாளிப்புதூரில் வினோத் குமார் என்பவர் தோட்டத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி சிவகிரிபட்டியை சேர்ந்த நவாஸ் மகன் ரியாஸ்உசேன்(19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து காப்பர் வயர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *மதுரை :* *மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *வட்டாட்சியரை மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார். சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் "பார்த்துக்கொள்ளலாம்" என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் வருசநாடு அருகே நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருசநாடு அருகே அமைந்துள்ள அரண்மனைபுதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகம விதிப்படி கிராம மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்பு வாஸ்து சாந்தியும் அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றது. அதனையடுத்து இன்று காலையில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை அழைத்து வந்து கோ பூஜை செய்து நான்காம்கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் மூன்று கருடன்கள் கோவிலை வலம் வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் வருசநாடு அரண்மனைப்புதூர் பகுதி மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.இவ்விழாவில் வருசநாடு மலை கிராம மக்கள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மந்தை அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள பூதமங்கலத்தில், அருள்மிகு ஸ்ரீ சிட்டிசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 :00 மணி முதல் 10 :00 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னதானம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு 10 :00 மணியளவில் கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் ஸ்ரீ வள்ளி திருமண நாடகம் நடைபெற உள்ளது.1
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- நேபாளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற தேனி சேர்ந்த மூன்று பேரை மீட்டு தரக் கோரி *நேபாளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களைக் கண்டறிந்து மீட்டு தரக் கோரி -* *குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு* தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த செல்வம், அவரின் மனைவி சித்ராதேவி மற்றும் தாய் சரஸ்வதி ஆகிய மூன்று பேரும் கடந்த 14ஆம் தேதி ஆன்மீக சுற்றுலாவுக்காக நேபாளில் கைலாச யாத்திரைக்கு சென்றுள்ளனர் இந்த நிலையில் நேபாலில் நேற்று ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும், சிலர் காணாமல் போய் இருப்பதாகவும், பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேனியில் இருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக சென்ற செல்வம் மற்றும் அவரின் மனைவி, தாய் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களை கண்டறிந்து மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர் கடந்த செவ்வாய்க்கிழமை வரை தற்போது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும், வெள்ள பாதிப்புக்கு பின்பு தங்களால் தொடர்பு கொள்ளவும் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் மகாதேவ் கைலாசா யாத்திரை செல்வதற்காக 49 நபர்களுடன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவே தங்களது குடும்பத்தினரை கண்டுபிடித்து தரக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என தெரிவித்தனர் பேட்டி - வீரக்குமார்1