logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

45 min ago
user_VIGNESH
VIGNESH
Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
45 min ago

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது 

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன 
இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் 
பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    45 min ago
  • கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! ​தேனி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பேரிடர் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ​ தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி, சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த N. சுந்தரநாகராஜன் என்பவரின் தாயார், தம்பி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 (14.08.2026) அன்று கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக சுற்றுலா புறப்பட்டுச் சென்றுள்ளனர். ​தற்போது நேபாளப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தொடர்பு பாதைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திரை சென்ற குடும்பத்தினரை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். ​ பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக N. சுந்தரநாகராஜன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2026) நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். ​மனுவில், "மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நேபாளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் எனது குடும்பத்தினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார். ​
    2
    கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
​தேனி:
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பேரிடர் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
​
தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி, சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த N. சுந்தரநாகராஜன் என்பவரின் தாயார், தம்பி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 (14.08.2026) அன்று கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக சுற்றுலா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
​தற்போது நேபாளப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தொடர்பு பாதைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திரை சென்ற குடும்பத்தினரை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் தவித்து வருகின்றனர்.
​
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக N. சுந்தரநாகராஜன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2026) நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார்.
​மனுவில், "மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நேபாளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் எனது குடும்பத்தினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
​
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் வருசநாடு அருகே நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருசநாடு அருகே அமைந்துள்ள அரண்மனைபுதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகம விதிப்படி கிராம மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்பு வாஸ்து சாந்தியும் அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றது. அதனையடுத்து இன்று காலையில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை அழைத்து வந்து கோ பூஜை செய்து நான்காம்கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் மூன்று கருடன்கள் கோவிலை வலம் வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் வருசநாடு அரண்மனைப்புதூர் பகுதி மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.இவ்விழாவில் வருசநாடு மலை கிராம மக்கள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மந்தை அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.
    1
    அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே நூற்றாண்டுகள்  பழமைவாய்ந்த அரண்மனைபுதூர் மந்தைஅம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
ஆயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தில்  கலந்து கொண்டு சாமி தரிசனம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  வருசநாடு அருகே  அமைந்துள்ள அரண்மனைபுதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகம விதிப்படி கிராம மக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த மந்தை  அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இரண்டு  நாட்களுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர  பூஜையுடன் தொடங்கியது.
அதன்பின்பு வாஸ்து சாந்தியும் அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை வேள்விகள்  நடைபெற்றது. அதனையடுத்து  இன்று காலையில்  பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை அழைத்து வந்து கோ பூஜை செய்து நான்காம்கால யாகசாலை வேள்வி  பூஜை  நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும்   48 நாட்கள்  விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள்  புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது வானத்தில் மூன்று கருடன்கள் கோவிலை  வலம் வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு  மூன்று நாட்களும் வருசநாடு அரண்மனைப்புதூர்   பகுதி மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.இவ்விழாவில் வருசநாடு மலை கிராம மக்கள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மந்தை  அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். 
இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 
பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.
மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    50 min ago
  • மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *மதுரை :* *மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *வட்டாட்சியரை மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார். சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் "பார்த்துக்கொள்ளலாம்" என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
    1
    மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.*

*மதுரை :*
*மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.*
*வட்டாட்சியரை மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.*
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை  கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் "பார்த்துக்கொள்ளலாம்" என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    20 hrs ago
  • *வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது, "பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
    1
    *வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது,
"பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு  பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த  ஆட்டோக்கள் மற்றும்  பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக  வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால்  அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்:  கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.
    1
    திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம்

வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு 

பொதுமக்கள் போராட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை  காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த  ஆட்டோக்கள் மற்றும்  பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக  வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால்  அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: 
கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை  ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.