*வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது, "பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

- *வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது, "பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.1
- சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- சீப்பாலக்கோட்டை அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீப்பாலகோட்டையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் அங்கன்வாடி மையத்திற்கு வருகின்ற குழந்தைகள் வருகை குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார் அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அலுவலக செயல்பாடுகள் குறித்தும் அங்குள்ள பதிவேடுகள் குறித்தும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்1
- தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கி உண்டு போராட்ட ஈடுபட உள்ளதாக 98 கிராம மக்கள் எச்சரிக்கை ஆண்டிபட்டி 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்1
- திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.1