Shuru
Apke Nagar Ki App…
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி மலைப்பகுதியில் 27.6 மில்லி மீட்டர் மழை பதிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணைப்பகுதியில் 27.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புத்தன் அணைப்பகுதியில் 24.2 மில்லிமீட்டர் சுருளோடு 11.2 முள்ளங்கினாவிளை 22.4 ஆணைக்கிடங்கு 25.6 மாம்பழத்துறை ஆறு 26 சிவலோகம் 10.2 கோழி போர் விளை 10.2 பாலமோர் 10.6 முக்கடல் அணை 10 மயிலாடி 12.8 சிற்றார் 1 7.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது
Sabarees
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி மலைப்பகுதியில் 27.6 மில்லி மீட்டர் மழை பதிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணைப்பகுதியில் 27.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புத்தன் அணைப்பகுதியில் 24.2 மில்லிமீட்டர் சுருளோடு 11.2 முள்ளங்கினாவிளை 22.4 ஆணைக்கிடங்கு 25.6 மாம்பழத்துறை ஆறு 26 சிவலோகம் 10.2 கோழி போர் விளை 10.2 பாலமோர் 10.6 முக்கடல் அணை 10 மயிலாடி 12.8 சிற்றார் 1 7.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது
More news from தமிழ்நாடு and nearby areas
- அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.1
- த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.1
- இருதயத்தில் உள்ள இரத்த அடைப்பை மாற்ற இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்1
- திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.1
- *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள் ஒட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்தது மாப்பிள்ளை யூரனி.. இங்கு தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது . என்றனர்.1
- விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது இங்கு சூரியன் உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும் இதன் காரணமாக விடுமுறை தினங்களில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் ஓணம் விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர் அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர் கன்னியாகுமரியில் இயற்கை அழகை கண்டு ரசித்த அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர் இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது1
- குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.1